புதுடெல்லி: இளைய தளபதி நடிகர் விஜயின் ரசிகர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது, அதன் பிறகு #RIP பாலா மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் வைரலாகிறது. நடிகர் விஜயின் நடிகரின் ரசிகர்கள் தங்கள் சக நண்பரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் விஜய்க்கு நாடு முழுவதும் ரசிகர்கள் விரவியிருக்கின்றனர். பரந்துபட்ட ரசிகர்கள் அதாவது, குழந்தைகள் முதல் வயதானவர்கள் என அனைத்து வயதினரும் விஜயின் ரசிகர்கள் என்பது விஜயின் பெருமைக்கும், புகழுக்கும் முக்கியமான காரணம்.


எனவே, விஜயின் ரசிகரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் #RIP பாலா இன்று ட்விட்டரில் பிரபலமடைந்தது.  விஜய் ரசிகர்கள் தங்கள் கவலைகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.




RIP பாலா என்பது trend ஆகும் பிரபலமான சொல்.  பாலா விஜய் என்ற பெயரில் இயங்கும் ட்விட்டர் கணக்கு  தளபதி விஜயின் ரசிகருடையது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரசிகர் தளபதி விஜய், தோனி மற்றும் ரெய்னாவுக்கும் ரசிகர் தான். யுவன் ஷங்கர் ராஜா மீதும் பைத்தியமாய் இருப்பவர்.


இந்த ரசிகரின்  profile picture நடிகர் விஜய்யின் புகைப்படம் உள்ளது. @AlwaysLonely07 என்ற பெயரில் ட்விட்டர் கணக்கு வைத்திருந்தார் இந்த ரசிகர். ஆகஸ்ட் 11 ஆம் தேதி, ஒரு டிவிட்டர் செய்தியை பகிர்ந்துக் கொண்டிருக்கும் இந்த விஜய் ரசிகர் ஆகஸ்ட் 13 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


இந்த விஷயத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்தாமல், விஜய் ரசிகர் என்ற சாயத்தை பூச வேண்டாம் என்று தல அஜித்தின் ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.



தமிழில் அவர் ட்வீட் செய்த கடைசி வரி “எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்” என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலாவிற்கு மனச்சோர்வு ஏற்பட்ட்தால் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு இந்த டிவிட்டர் செய்தி சுட்டிக் காட்டப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை.


பாலாவின் மரணம் தற்கொலையாக இருந்தால், அது அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையாகத் தான் இருக்கும் என்று விஜய்யின் பல ரசிகர் பக்கங்கள் கூறியுள்ளன. அவரது கடைசி ட்வீட்டரில் தன்னுடைய தளபதி விஜயை பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் விஜயின் ரசிகர்களின் சோகம் அதிகமாக உள்ளது...  


தற்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் தளபதி விஜய் தான் என்று கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு வெளியான 'பிகில்' திரைப்படம் அனைத்து தரப்பின் வரவேற்பையும் பெற்றது. இது கடந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாக வெளிப்பட்டது.



விஜய் அடுத்ததாக 'மாஸ்டர்' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கும் இந்த அதிரடி  'மாஸ்டர்' திரைப்படத்தில் தளபதி விஜயுடன் விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடிப்பதால் திரைப்படம் வெளியாகும் முன்னரே பெருமளவிலான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் பரம ரசிகர், தனது இறப்புக்கு முன்னதாக இந்த திரைப்படத்தை பார்க்கமுடியவில்லை என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.  


மாளவிகா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா  மற்றும் ரம்யா சுப்பிரமணியன் என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக 'மாஸ்டர்' வெளியீடு ஒத்தி போடப்பட்டுள்ளது.


Also Read | Sushanth மரண எதிரொலி: Mahesh Bhatt-ன் சடக்-2 பட ட்ரெய்லருக்கு 4.5 மில்லியன் Dis-likes!!