Romantic Ideas For Newly Weds On First Night : திருமணம் எந்த அளவிற்கு முக்கியமோ, திருமணம் முடிந்த அந்த இரவும் அதே அளவிற்கு முக்கியம் ஆகும். ஏற்கனவே காதலித்து, பின்னர் திருமணம் செய்து கொண்டவர்கள் தங்களது முதல் இரவு குறித்து பலமுறை பேசியிருப்பர். ஆனால், நடைமுறையில் சிலருக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கலாம். அந்த இரவில், உடலுறவு மட்டுமன்றி இன்னும் சில விஷயங்களையும் செய்யலாம். இப்படி, என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதவர்களுக்கான சில ரொமேண்டிக் ஆன ஐடியாக்கள், இதோ. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காதல்-காமம் கலந்து பேசலாம்:


உடலுறவு மனநிலைக்கு செல்வதற்கு முன்னர் உங்கள் உடலையும் மனதையும் தயார் படுத்த வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அதற்கு நீங்கள் முதலில் காதலும் காமமும் கலந்தவாறு பேச வேண்டும். திருமணம் ஆன முதல் நாள் இரவு இருவரும் இது போன்ற பேச்சில் ஈடுபடுங்கள். இடையிடையே முத்தம் கொடுப்பது, காமம் கலந்து பேசுவதால் உங்களுக்கும் உடல் அளவிலும் மனதளவிலும் நெருக்கம் அதிகமாகலாம். 


நிகழ்காலத்தில் இருப்பது:


“கல்யாணத்த பண்ணிப்பார்..வீட்டக்கட்டிப்பார்” என்று நம் ஊரில் ஒரு பழமொழி கூறுவர். வீட்டை கட்டுவதும், திருமணத்தை நடத்துவதும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. திருமணம் முடிந்த பிறகு நம் உடலும் மனதும் சோர்வடையலாம். இதற்கு காரணம், திருமணத்தின் போது நீங்கள் செய்த அத்தனை வேலையாக இருக்கும். மேலும், சிலருக்கு திருமண செலவுகள் அல்லது புதிதாக ஒரு குடும்பத்தை தொடங்குவது குறித்த சந்தேகங்கள் இருக்கும். இதையெல்லாம் நினைத்து கவலை படாமல், அப்போது உங்கள் பார்ட்னருடன் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். அவர்களுடன் பேசுவது, சிரிப்பது, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது போன்ற செயல்களை நீங்கள் செய்ய வேண்டும்.



தன்னம்பிக்கை:


உங்கள் உடலுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருப்பது, உங்களின் மன தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்க உதவும். உங்கள் பார்ட்னரின் அன்பும் காதலும், உங்களை வேறு ஒரு மனிதராக மாற வேண்டும் என்று நினைக்க வைக்காது. நீங்கள் நீங்களாகவே உணரலாம். இதை நினைவில் வைத்துக்கொண்டு, உங்கள் உடல் தேவைகளுக்கு கொஞ்சம் செவி சாய்த்தால் தன்னம்பிக்கை தானாக வந்துவிடும்.


மேலும் படிக்க | உடலுறவுக்கு முன் கண்டிப்பாக செய்ய வேண்டிய ‘அந்த’ 7 விஷயங்கள்..!


ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவியுங்கள்:


உங்கள் முதல் இரவு மறக்க முடியாததாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அது உங்களை ஸ்பெஷலாக உணர வைத்த இரவாக இருக்க வேண்டும். எனவே, அந்த இரவின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து மகிழுங்கள். உங்கள் கவனம் உங்கள் மீதும் உங்களது பார்ட்னர் மீதும் மட்டும் இருந்தாலே போதுமானது. உங்கள் இருவருக்கும் எது தேவையோ அதை செய்யுங்கள். அது, உடலுறவாக இருந்தாலும் சரி, இருவரும் கைக்கோர்த்துக்கொண்டு இரவு முழுக்க கதை பேசுவதாக இருந்தாலும் சரி. 


புதிய தொடக்கம்:


இந்த இரவும் உறவும் உங்களுக்கு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த புதிய அத்தியாயத்தில் நீங்கள் இருவராக இருந்தாலும் பல முக்கிய முடிவுகளை ஒன்றாகவே எடுக்க வேண்டும். இந்த தொடக்கம், இருவருக்கும் புதிதானதாக அமையும். ஆனால், இது எவ்வளவு தூரம் செல்கிறதாே அவ்வளவு தூரம் இருவரும் உங்கள் கைகளை பத்திரமாக பற்றிக்கொள்ள வேண்டும் என மனதளவில் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். 


மேலும் படிக்க | படுக்கையறை வாழ்க்கை சலித்து விட்டதா? அதை புதுப்பிப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ