மக்கள் மலிவுவிலை மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களின் விலையை ஒரு ரூபாயாக குறைத்து மத்திய அரசு உத்தரவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்கள் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் சானிடரி நாப்கின்களின் விலையை ரூ. 2.50-இல் இருந்து ரூ.1-ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. மகளிர் நலத்தை மேம்படுத்தும் முயற்சியாக இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.


இதுகுறித்து, உரம் மற்றும் ரசாயனத் துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில்; 4 சானிடரி நாப்கின்களைக் கொண்ட பாக்கெட் தற்போது 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாக்கெட், ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் 4 ரூபாய்க்கு கிடைக்கும். நாடு முழுவதும் உள்ள மக்கள் மருந்தகங்களில் (ஜன் ஒளஷதி கேந்திரா) சுவிதா என்ற பிராண்ட் பெயரில் இந்த நாப்கின்கள் கிடைக்கும். நாப்கின்களின் விலையை 60 சதவீதம் அளவுக்கு குறைத்தன் மூலம், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றியுள்ளது.


இதுவரை உற்பத்தி விலைக்கே சானிடரி நாப்கின்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த விலையை மேலும் குறைப்பதற்காக, மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படும். மக்கள் மருந்தகங்களில் கடந்த ஓராண்டில் 2.2 கோடி சானிடரி நாப்கின் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.