புதுடெல்லி: நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டு நிறுத்தப்படுவதாக பரவிய வதந்திகளுக்கு மத்திய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகத்திடம் எந்த திட்டமும் இல்லை என்று மத்திய அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. பொதுத்துறை வங்கியே தனது ஏடிஎம்களில் குறைந்த மதிப்புடைய நோட்டுக்களை வைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இருக்கும் என வங்கிகள் தெரிவித்துள்ளன. சில வங்கிகள் தங்கள் ஏடிஎம் இயந்திரங்களில் குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை மட்டும் வைக்கும்படி மாற்றத் தொடங்கியுள்ளன. இதுபோல வேறு சில வங்கிகளும் இந்த வகையான நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனத் தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியன் வங்கியின் முடிவு மட்டுமே..
இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக சென்னை உள்ள ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகளை வைக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். தற்போது இந்தியன் வங்கி மட்டுமே இந்த முடிவை எடுத்துள்ளது. மத்திய அரசாங்கத்திடமிருந்தோ அல்லது ரிசர்வ் வங்கியிடமிருந்தோ இதுபோன்ற அறிவுறுத்தல்கள் எதுவும் வெளியாக வில்லை. அதேபோல வேறு எந்த அரசு வங்கி அல்லது தனியார் வங்கியோ அத்தகைய முடிவை இன்னும் எடுக்கவில்லை.


இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்த முடிவை எடுத்துள்ளது. அதற்காக 2000 ரூபாய் நோட்டு நிறுத்தப் போகிறது என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. இது தொடர்பாக பொய்யான செய்திகள் பரவி வருகிறது. ஆனால் உண்மை அதுவல்ல... ஏனென்றால் ரூ. 2000 நோட்டுக்களை நிறுத்த எந்த யோசனையும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.


2000 ரூபாய் நோட்டு 2016 இல் வெளியிடப்பட்டது:
2016 நவம்பரில் மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு பின்னர், ரூ.2,000 என்ற புதிய நோட்டு வெளியிடப்பட்டது. நவம்பர் 8, 2016 அன்று, அரசாங்கம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கியது. அதன்பிறகு, ரிசர்வ் வங்கி புதிய 500 நோட்டுடன் ரூ .2,000 நோட்டையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.