திருமணத்தன்று ஓடிப்போன மணமகள் ஹரியானாவில் தனது லெஸ்பியன் கூட்டாளியுடன் வசித்து வருவதை கண்டறிந்த பெற்றோர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் பல விசித்திரமான நிகழ்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றனர். அதில், சில சம்பவம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், இன்னும் சில சிரிப்பில் ஆழ்த்தும். இந்நிலையில், திருமணம் முடிந்து சில நாட்களுக்கு பின்னர் திருமணமான கணவரை விட்டு தனது லெஸ்பியன் காதலியுடன் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


உத்தரப்பிரதேசம் மாநிலம் சஜான்பூரை சேர்ந்த ஒரு இளைஞருக்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்து சில நாட்களுக்கு பிறகு திருமணமான அந்த பெண் வீட்டில் இருந்து திடீர் என காணமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் தன் மனைவியை காணவில்லை என கணவர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். 


இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். காணாமல் போன 23 நாட்களுக்கு பின்னர், காவல்துறையினர் விசாரணையில் அவரது மனைவி ஹரியானா மாநிலத்தில் இருப்பது தெரியவந்துள்ளனது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது அவர் அங்கு அவரது தோழியுடன் தங்கியிருந்தார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. 


இந்த பெண்ணும் அவரது தோழியும் திருமணத்திற்கு முன்பே ஒரினசேர்க்கையாளராக இருந்து வந்துள்ளனர். இருந்தாலும் குடும்பத்தினரின் வற்புறுத்தலின் பேரில் அவர் திருமணம் செய்துள்ளார். ஆனால் அவருடன் வாழ விரும்பாமல் மீண்டும் தனது தோழியுடனேயே வந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.  


இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது. அதில் இரண்டு பெண்களும் தாங்கள் 18 வயதை கடந்தவர்கள் அதனால் நாங்கள் செய்வது எங்களுக்கு சரியானது என வாதிட்டனர். இந்த வழக்கின் விசாரணை நீதிமண்டத்தில் விவாத்தித்து வருகின்றனர்.