சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சோயுஸ் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறால் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை ரஷ்யா தற்காலிகமாக கைவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, அமெரிக்கா, ரஷ்யாவைச் சேர்ந்த 2 வீரர்கள், ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் புறப்பட்டனர். கஜகஸ்தானில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பூஸ்டர் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், பல்லாஸ்டிக் என்ற அவசர வாகனம் மூலம், விண்வெளி வீரர்கள் இருவரும் பத்திரமாக தரையிறங்கினர்.


இந்நிலையில் தற்போது கோளாறு குறித்து விசாரணை நடத்த ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை தற்காலிகமாக ரஷ்யா நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.