புதுடெல்லி: தனியார் துறையை வேலை செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. கொரோனா பரவல நெருக்கடிக்கு மத்தியில், இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்கள். 2021ஆம் ஆண்டில் தனது ஊழியர்களின் சம்பளத்தை சராசரியாக 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு சம்பளத்தில் சராசரியாக 8.6 சதவிகித சம்பள உயர்வு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. டெலோயிட் Deloitte மேற்கொண்ட ஆய்வில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெலாய்டின் சம்பள உயர்வு குறித்த ஆய்வு
டெலாயிட் மேஎற்கொண்ட ஆய்வில், 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் கட்டத்தில், கடந்த ஆண்டை விட இந்த முறை சராசரியாக 8 சதவிகித சம்பள உயர்வு ஏற்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், 60 சதவீத நிறுவனங்களில் ஊழியர்களின் சம்பளம் அதிகரித்துள்ளது.


இந்த கணக்கெடுப்பின்படி, 2022 ஆம் ஆண்டில் தனியார் ஊழியர்களின் சம்பளம் 8.6 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுல், சுமார் 25 சதவீத நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில், தனது ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வை அளிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | Quad மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்க பயணம்


ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட 450 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 


'2021 Workforce Increment Trends Survey' என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வு 2021 ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. அனுபவம் வாய்ந்த மனிதவளத்துறை வல்லுநர்களிடம் இது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. 450 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆய்வில் சேர்க்கப்பட்டன.


நிறுவனங்கள் ஊழியர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு சம்பளத்தை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும், சிறப்பாக செயல்படும் ஊழியர் சராசரியாக வேலை செய்யும் ஊழியரை விட சுமார் 1.8 மடங்கு சம்பளத்தை அதிகம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.


ஆய்வை நடத்திய Deloitte Touche Tohmatsu India நிறுவனத்தின் பார்டனரான ஆனோடோருப் கோஷ், ஆய்வு குறித்து கூறுகையில், பெரும்பாலான நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டு, தங்கள் ஊழியர்களுக்கு சிறந்த ஊதிய உயர்வை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.


மேலும், 2022 ஆம் ஆண்டில், தகவல் தொழில்நுட்பத் துறை (IT) துறை ஊழியர்களுக்கு அதிக சம்பள உயர்வைக் கிடைக்கும் என்று மதிப்பிடப்படுகிறது, அதைத் தொடர்ந்து வாழ்க்கை அறிவியல் (Life Science) துறை. இதில் இரட்டை இலக்க ஊதிய உயர்வு எதிர்பார்க்கும் ஒரே துறை ஐடி மட்டுமே, சில டிஜிட்டல்/இ-காமர்ஸ் நிறுவனங்களும் அதிக சம்பள உயர்வு வழங்க திட்டமிட்டுள்ளன.


ஆனால், சில்லறை, விருந்தோம்பல், உணவகம், உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆகியவற்றில், அதன் வளர்ச்சி மற்றும் சந்தைக்கு ஏற்ப ஊதிய உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ | பாதுகாப்பு துறையில் ஏற்றுமதியாளராக உருவாகி வரும் இந்தியா: பிரதமர் மோடி புகழாரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR