இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, ரிலேஷன்ஷிப் டிப்ஸ் ஒன்றை கொடுத்திருக்கிறார். அவருடைய முன்னாள் கணவர் நாகசைதன்யா  அண்மையில் நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டதால், சமந்தாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் பலரும் எதிர்பார்த்தனர். இந்த சூழலில் நடிகை சமந்தா ரிலேஷன்ஷிப் குறித்து ஏற்கனவே பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. அதில் அவர் கூறியிருக்கும் முக்கிய அட்வைஸ் என்னவென்றால், உங்களுக்கு கடைசி வரை இருக்கும் உண்மையான ரிலேஷன்ஷிப் யாரென்றால் அது நீங்கள் தான், உங்களுக்கு நீங்கள் நல்ல நண்பராக இருக்க பழகுங்கள் என தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில் ரிலேஷன்ஷிப் குறித்து இளம் மாணவ, மாணவிகளுக்கு நடிகை சமந்தா அறிவுரை கூறுகிறார். அதில், " இந்த வாழ்க்கையில் நீங்கள் வைத்திருக்கும் மிகப்பெரிய உறவு யாரென்றால், உங்களோடு நீங்கள் வைத்திருக்கும் உறவு தான். பெற்றோர், காதலன், காதலி என யாருமில்லை. நீங்கள் கடினமான காலத்தை எதிர்கொள்ளும்போது மிக மிக தாழ்வாக சிந்தித்துக் கொண்டு இருப்பீர்கள். அப்போது, உங்களுக்காக நீங்கள் மட்டுமே இருப்பீர்கள். எனவே உங்களை நீங்கள் சிறந்த நண்பராக்கிக் கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரையில் உங்களுக்கு இப்போது எக்ஸாம் எல்லாம் தான் பெரிய தடை என நினைப்பீர்கள். ஆனால் என்னை நம்புங்கள் நீங்கள் அதனை வெற்றிகரமாக கடக்க முடியும்" என கூறியுள்ளார்.


மேலும் படிக்க | உங்கள் வயதிற்கு ஏற்ப தினசரி எவ்வளவு தூக்கம் அவசியம் தேவை?



சமந்தாவின் இந்த ரிலேஷன்ஷிப் டிப்ஸூக்கு பலரும் லைக்குகளை அள்ளி வீசியிருக்கின்றனர். சமந்தா உண்மையிலேயே மிக கடுமையான காலத்தை எதிர்கொண்டுவிட்டதாகவும், இனி வரும் நாட்கள் அவருக்கு நல்ல நாட்களாக இருக்கும் என்றும் அன்பையும், ஆதரவையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் சாம், நீங்கள் மகிழ்ச்சியாகவும், தைரியமாகவும் இருக்கவும் என்றும் நடிகை சமந்தாவுக்கு ஆதரவான கருத்துகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 


நடிகை சமந்தா தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சில ஆண்டுகளிலேயே இவர்களின் திருமண உறவு முடிவுக்கு வர, இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்றுக் கொள்வதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து நடிகை சமந்தா உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டார். அத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். 


மேலும் படிக்க | கவரிங் மற்றும் தங்க நகைகளை வீட்டிலேயே சுத்தம் செய்வது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ