இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உலகம் முழுவது நல்ல வெற்றியை கொடுப்பவர் நடிகர் விஜய். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், கேரளாவில் தமிழ் நாட்டிற்கு இணையாக விஜய் படங்களுக்கும் நல்ல வரவேற்பு உண்டு. விஜய் ரசிகர்கள் பல நற்பணிகளை செய்து வருவது அவ்வப்போது செய்திகளாக பரவும். 


அந்த வகையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜூன் மாதம் வர உள்ள நிலையில் தற்போது டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். "samrat vijay" என டேக் உருவாக்கி விஜய் பிறந்த நாளிற்கு 100 நாட்கள் இருக்கிறது என்று இப்போது இருந்த கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டார்கள்.


தற்போது நடிகர் விஜய் 62-வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கடந்த ஜனவரி 19-ம் தேதி பூஜையோடு இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கியது. விஜய் அவர்கள் கிளப் செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். 


இந்த படத்தில் மூன்று வில்லன்கள் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி 62 படத்தின் வில்லன்களில் ஒருவர் ராதாரவி, மற்றோருவர் பழம்பெரும் அரசியல் தலைவர் பழ.கருப்பையா என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் இப்படத்தின் மூன்றாவது வில்லன் யார் என்று தகாவல் தற்போது வரை வெளியாக வில்லை.


விஜய் 62 படம் இந்த வருட தீபாவளிக்கு வெளிவரும் என ஏ.அர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.