Horoscope November 13, 2021: Saturday Remedies: ஜோதிடத்தில், (Astrology) சனி பகவான் மிகவும் கொடூரமான கிரகமாக கருதப்படுகிறது. சனி பகவான், ஒரு மனிதனின் ஆயுளை ஆதிக்கம் செய்பவர் ஆதலால், இவர் ஆயுள்காரகன் என்றும் போற்றப்படுகிறார். நீண்ட ஆயுள் அல்லது அகால மரணம் இரண்டுக்குமே காரகன் சனி பகவான்தான். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்குக்கும் இவரே காரகன். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் (Shani Dev) பகையாகவோ, நீசமாகவோ இருந்தால், அந்த ஜாதகர் ஒரு காலகட்டத்தில் எல்லா முயற்சிகளிலும் தோல்வியடைந்து, துன்பங்களை அனுபவிக்க நேரிடும். எனவே அதன்படி சனி சம்பந்தமான பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டியது மிகவும் முக்கியமானது. சனிபகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சனிக்கிழமையில் (Saturday) எந்தெந்த பொருட்களை வாங்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.


ALSO READ | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்


சனிக்கிழமை இந்த பொருட்களை வாங்க வேண்டாம்


உப்பு: சனிக்கிழமை உப்பு வாங்கினால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். எனவே சனிக்கிழமை உப்பு வாங்க வேண்டாம். வாரத்தின் மற்ற நாட்களில் உப்பு வாங்குவது நல்லது.


மரக்கட்டை: சனிக்கிழமையில் மரக்கட்டை வாங்குவதும் பொருந்தாது. அப்படி வாங்கினால் பல பிரச்சனைகள் அழைக்காமலேயே வரும் என்பது ஐதீகம்.


இரும்பு பொருட்கள்: சனிக்கிழமையன்று இரும்பு பொருட்களை வாங்கவோ விற்கவோ கூடாது. இப்படிச் செய்தால் கடன் பிரச்சனை ஏற்படக்கூடும்.


எண்ணெய்: சனிக்கிழமை எண்ணெய் வாங்கக் கூடாது. வாரத்தில் வேறு எந்த நாளிலும் எண்ணெய் வாங்கி சனிக்கிழமை சனி கோவிலில் தீபம் ஏற்றவும்.


கருப்பு பொருட்கள்: கருப்பு நிறத்தில் உள்ள ஆடைகள், எள் போன்றவற்றை சனிக்கிழமையில் வாங்காமல், இந்த நாளில் தானம் செய்யுங்கள்.


ஷூ மற்றும் செருப்பு: சனிக்கிழமையன்று ஷூ மற்றும் செருப்புகளை வாங்க வேண்டாம். இதனால் சனியின் தோஷத்தால் அவதிப்பட நேரிடம்.


ALSO READ | தன்தேராஸ் கொண்டாடப்படும் காரணம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR