சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், நமாஸின் போது நோட்டீஸ் கொடுப்பது அல்லது நமாஸின் போது சத்தமாக இசை வாசிப்பது ஆகியவை சட்ட மீறல்கள் பட்டியலில் இணைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சவூதி அரேபியவில், சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த பல பொது நடத்தை விதிகளை சவூதி அரசாங்கம் அறிவித்துள்ளது, இதில் 19 வகையான விதி மீறல்களுக்கு அபராதம் விதித்துள்ளது.


இந்த விதிகள் குடியிருப்பு பகுதிகளில் உரத்த குரலில் விளையாடுவதற்கும், செல்லப்பிராணியின் சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீரை செய்யாமல் செல்லுதல், சாலையில் துப்புவது போன்ற குற்றச்செயல்களுக்கு பொருந்தும் என குறிப்பிட்டுள்ளது. சவூதி அரசு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதன் கதவுகளைத் திறக்கும் நேரத்தில் இந்த புதிய விதிகள் வந்துள்ளன. மீறல்கள் பட்டியலில், ஒழுக்கத்திற்கு முரணான நடத்தை உள்ளிட்ட பாலியல் நடத்தைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.


உள்நாட்டு ஊடக தகவல்படி, சவூதி உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில், நமாஸ் குறித்த தகவல்களை வழங்குவது அல்லது நமாஸின் போது உரத்த குரல் கொடுப்பது ஆகியவை மீறல்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என குறிப்பிட்டுள்ளது. மேலும், தவறான செயல்களைச் செய்வது, இனவெறியை ஊக்குவிக்கும் வாக்கியங்கள் அல்லது புகைப்படங்களுடன் ஆடைகளை அணிவது, அல்லது ஆபாசமான பொருள்களை விளம்பரப்படுத்தல் அல்லது வைத்திருத்தல், மற்றவர்களுக்கு முன்னால் ஆபாச செய்கைகளை செய்து காட்டுதல் போன்றவை குற்றப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இத்தகு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.