மாதந்தோறும் குறைந்த்பட்சம் 500 ரூபாய் முதலீடு செய்து வளமான எதிர்காலத்தை உருவாக்கலாம். உங்களை கோடீஸ்வரராகும் அரசு திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்த அரசாங்க திட்டத்தின் பலன்களை அறிந்து கொள்ளுங்கள்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

PPF முதலீடு: நீங்கள் அரசு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், இந்த திட்டத்தில் ரூ 500 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். நீண்ட காலத்திற்கு இதில் முதலீடு செய்து கோடீஸ்வரராகவும் ஆகலாம்.


ஒரு வேலையில் சேர்ந்த பிறகு முதலீட்டைத் திட்டமிடுவது முக்கியம். முதலீட்டுத் தொகையை அரசாங்கத் திட்டத்தில் சேர்த்தால், உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும், அதே நேரத்தில் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். 


தற்போது, ​​பல அரசாங்க திட்டங்கள் உள்ளன, அவற்றில் நீங்கள் ஒரு சிறிய தொகையில் முதலீடு செய்யத் தொடங்கலாம். இது எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடாக இருக்கும். 


சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலமும் நல்ல பணம் சம்பாதிக்கக்கூடிய முதலீடான PPF (PPF deposit) பற்றி இன்று தெரிந்து கொள்வோம். தபால் அலுவலகம் அல்லது ஏதேனும் அரசு வங்கி மூலம் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.


Also Read | வங்கி வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி! வங்கி முழுகினாலும் பணத்துக்கு கேரண்டி!


500 ரூபாய் முதலீடு 
500 ரூபாயில் நீங்கள் PPF இல் முதலீடு செய்யத் தொடங்கலாம். இந்தக் கணக்கில் ஒரு வருடத்தில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சமும், அதிகபட்சமாக மாதம் ரூ.12500ம் முதலீடு செய்யலாம். PPF இன் முதிர்வு 15 ஆண்டுகள். தேவைப்பட்டால் அதை நீட்டித்துக் கொள்ளலாம்.


எவ்வளவு வட்டி கிடைக்கும்?


மத்திய அரசின் இந்த திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு (PPF deposit)  7.1 சதவீத வட்டி கிடைக்கும். இந்தத் திட்டத்தில் மார்ச் மாதத்துக்குப் பிறகு வட்டி வழங்கப்படும். இந்தத் திட்டத்தில், உங்கள் பெயரில்  பிபிஎஃப் கணக்கைத் திறக்கலாம். மைனராக இருக்கும் சிறார்களும் பிபிஎஃப் கணக்கைத் திறக்கலாம். அவரது பெயரில் அவரது பாதுகாவலர் இந்த கணக்கைத் திறக்கலாம்.


மாதந்தோறும் 12500 ரூபாய் என குறைந்தது 25 வருடங்கள் முதலீடு செய்ய வேண்டும். ஆண்டு முதலீடு ரூ.1.5 லட்சத்தின் படி ரூ.37,50,000 குவிந்திருக்கும். இதற்கு ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டியாக ரூ.65,58,012 ஆகவும், முதிர்வுத் தொகை 1,03,08,012 ஆகவும் இருக்கும்.


வரி விலக்கும் உண்டு
இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், வரி விலக்கின் பலனும் கிடைக்கும். வருமான வரியின் 80சி பிரிவின் வரி விலக்கு கிடைக்கும். இங்கு முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமின்றி, இங்குள்ள முதலீட்டில் ஆண்டுதோறும் நல்ல வருமானத்தையும் பெறலாம்.


ALSO READ | PPF கணக்கை பஞ்சாப் நேஷனல் வங்கியில் திறந்தால் பல நன்மைகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR