எஸ்.பி.ஐ. வங்கியின் Form-16A வட்டி சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது எப்படி?
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் படிவம் -16 ஏ டிடிஎஸ் (Form-16A TDS) சான்றிதழை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் என்பதைக் குறித்து பார்ப்போம்.
How to Download Form-16A: 2019-20 நிதியாண்டில் உங்கள் சேமிப்புக் கணக்குகள் மற்றும் ஒரு வங்கியில் நிலையான வைப்புத்தொகைகளில் நீங்கள் எவ்வளவு வட்டி சம்பாதித்தீர்கள் என்பதை வட்டி சான்றிதழ் மூலம் நீங்கள் அறிந்துக்கொள்ளலாம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி கிளைக்கு செலிவதன் மூலமோ அல்லது ஆன்லைன் வங்கி வசதியிலிருந்து பதிவிறக்குவதன் மூலமோ வாடிக்கையாளர் தனது வட்டி சான்றிதழைப் பெறலாம்.
வட்டி சான்றிதழைத் தவிர, 2019-20 நிதியாண்டிற்கான உங்கள் நிலையான வைப்பு முதலீட்டில் செலுத்தப்பட்ட / திரட்டப்பட்ட வட்டிக்கு வரி கழிக்கப்பட்டிருந்தால், உங்கள் வங்கியில் இருந்து படிவம் -16 ஏ பெற வேண்டும். படிவம் -16 ஏ என்பது ஒரு டி.டி.எஸ் (மூலத்தில் வரி விலக்கு - tax deducted at source) சான்றிதழாகும். இது உங்களுக்கு செலுத்தப்பட்ட / திரட்டப்பட்ட மொத்த வட்டி மற்றும் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் வரி விலக்கு அளிக்கப்பட்ட விவரங்களைக் கொண்டுள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் படிவம் -16 ஏ டிடிஎஸ் (Form-16A TDS) சான்றிதழை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம்
ALSO READ | ஒரு நற்செய்தி... இனி வாட்ஸ்அப் மூலம் வீட்டிற்கு வரும் வங்கி சேவைகள்!
எஸ்பிஐ வங்கியின் ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தி டிடிஎஸ் சான்றிதழைப் பதிவிறக்க கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்:
படி 1: onlinesbi.com என்ற இணையதளத்திற்கு சென்று, உங்கள் கணக்கில் உள்ளே நுழைய வேண்டும்.
படி 2: வெற்றிகரமாக உள்நுழைந்ததும், "நிலையான வைப்பு" (Fixed Deposit) தாவலின் கீழ் வரும் "டி.டி.எஸ் சேவை" (TDS enquiry) என்பதைக் கிளிக் செய்க.
படி 3: ஒரு புதிய வலைப்பக்கம் மூன்று விருப்பங்களுடன் உங்கள் முன்னால் வரும். (அ) டி.டி.எஸ் நிதி ஆண்டு (TDS financial year), (ஆ) என்.ஆர்.ஓ டி.டி.எஸ் விவரம் (NRO TDS enquiry) மற்றும் (சி) பதிவிறக்கு (Download).
படி 4: டி.டி.எஸ் நிதி ஆண்டு விருப்பத்தின் கீழ், நிலையான வைப்பு இன்னும் நடந்து கொண்டே இருந்தால் "நேரடி கணக்குகள்" (Live accounts) அல்லது 2019-20 நிதியாண்டில் நிலையான வைப்பு முதிர்ச்சியடைந்திருந்தால் "மூடிய கணக்கு" (Closed account) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 5: தேர்ந்தெடுக்கப்பட்டதும், உங்கள் நிலையான வைப்புகணக்கு விவரங்களை உங்கள் வலைத் திரை காண்பிக்கும். கீழ்தோன்றும் மெனுவிலிருந்து 2019-20 நிதியாண்டைத் தேர்ந்தெடுக்கவும். Submit என்பதைக் கிளிக் செய்க.
படி 6: சமர்ப்பித்ததும், டி.டி.எஸ் விசாரணைக்கான உங்கள் கோரிக்கைக்கான குறிப்பு எண்ணும் உருவாக்கப்படும். மேலே குறிப்பிட்டுள்ள "பதிவிறக்கு" (Download) தாவலில் டி.டி.எஸ் விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
எஸ்பிஐ வலைத்தளத்தின்படி, உங்கள் நிலையான வைப்பு கணக்குகள் மட்டுமே இந்த பக்கத்தில் காண்பிக்கப்படும். முந்தைய மற்றும் தற்போதைய நிதி ஆண்டுகளுக்கான டி.டி.எஸ் சான்றிதழை நீங்கள் உருவாக்கலாம். இந்த கணக்குடன் இணைக்கப்பட்ட அனைத்து கணக்குகளுக்கான டி.டி.எஸ் விவரங்கள் பதிவிறக்க தாவலின் கீழ் 30 நிமிடங்களுக்குள் கிடைக்கும். உருவாக்கப்பட்ட அனைத்து அறிக்கைகளும் எந்த நேரத்திலும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
படி 7: உங்கள் கோரிக்கை செயலாக்கப்பட்டதும், "பதிவிறக்கு" தாவலின் கீழ் டி.டி.எஸ் சான்றிதழைப் (TDS certificate) பதிவிறக்க அல்லது "கோரிக்கை ஐடி" (Request ID) என்பதைக் கிளிக் செய்யலாம்.