ஜூன் மாதம் முதல் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்த சில மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ, இன்று முதல் எஸ்பிஐ கடன் வட்டி விகிதத்தில் 40 புள்ளிகள் அதிகரித்தது. ரிசர்வ் வங்கி தன்னுடைய ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. எனவே எஸ்பிஐ வங்கி தன்னுடைய வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.


வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் முதல் ஹால்மார்க் தங்கம் என இன்று முதல் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க நிதி தொடர்பான மாற்றங்கள் இவை.


SBI வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வீட்டுக் கடன்களுக்கான வெளிப்புற பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை (இபிஎல்ஆர்) 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்த எஸ்.பி.ஐ அதை 7.05 சதவீதமாக உயர்த்தியுள்ளது.


இனிமேல் வட்டி விகிதம் 6.65 சதவீதம் + CRP என்பது RLLR ஆக இருக்கும். ஜூன் 1, 2022 முதல் புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வந்தன.



 


இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கட்டணம் 
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (ஐபிபிபி) ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறைக்கு (ஏஇபிஎஸ்) கட்டணங்களை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்தக் கட்டணங்கள் ஜூன் 15 முதல் அமலுக்கு வருகிறது.


முதல் மூன்று AEPS பரிவர்த்தனைகள், AEPS ரொக்கம் திரும்பப் பெறுதல், AEPS பண வைப்பு மற்றும் AEPS மினி அறிக்கை ஆகியவை மாதந்தோறும் இலவசம். ஒவ்வொரு ரொக்கம் திரும்பப் பெறுதல் அல்லது ரொக்க வைப்புத் தொகைக்கு ரூ. 20 + ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும். அதே சமயம் மினி ஸ்டேட்மென்ட் பரிவர்த்தனைக்கு ரூ. 5 + ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க | இபிஎஃப் கணக்கில் புதிய நாமினேஷனை தாக்கல் செய்வது எப்படி? 


மூன்றாம் தரப்பு மோட்டார் இன்சூரன்ஸ் பிரீமியங்கள் விலை உயர்ந்தன
1000cc க்கும் குறைவான தனியார் கார்களுக்கான வருடாந்திர மூன்றாம் தரப்பு காப்பீட்டு விகிதம் ரூ.2,072 என்பதில் இருந்து  ரூ.2,094 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


1000 முதல் 1500 சிசி வரையிலான இன்ஜின்கள் கொண்ட தனியார் கார்களுக்கான மூன்றாம் தரப்பு காப்பீடு புதிய கட்டணம், ரூ.3,221ல் இருந்து ரூ.3,416 ஆக அதிகரித்தது.


1500 cc க்கும் அதிகமான இன்ஜின்களைக் கொண்ட பெரிய தனியார் வாகனங்களுக்கான பிரீமியம் ரூ. 7,897 என்பதில் இருந்து ரூ.7,890 ஆக இருக்கும்.  


மேலும் படிக்க | பழைய வாகனங்கள் மறுபதிவு கட்டணம் 8 மடங்கு உயரும்!


ஹால்மார்க்கிங்
தங்க நகைகளுக்கு ஹால்மார்க்கிங் கட்டாயம் என்றாலும், இதன் இரண்டாம் கட்டம் இன்று முதல் தொடங்கியது. ஏற்கனவே உள்ள 256 மாவட்டங்களிலும், 32 புதிய மாவட்டங்களிலும் (AHC) தங்க நகைகள்/கலைப்பொருட்களுக்கான ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்பட்டது.


மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்களின் (Assaying and Hallmarking Centres) கீழ், 14, 18, 20, 22, 23, 24 காரட் அளவுள்ள தங்க நகைகள் மற்றும் கலைப் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படலாம், மேலும் அவை ஹால்மார்க்கிங்குடன் விற்கப்பட வேண்டும். 


ஆக்சிஸ் வங்கியின் சேமிப்பு கணக்கு கட்டணம்
நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சேமிப்பு கணக்குக்கான ஆக்சிஸ் வங்கியின் சராசரி மாதாந்திர இருப்புத் தேவை ரூ. 15,000 லிருந்து ரூ. 25,000ஆக அதிகரித்துள்ளது.  இந்தக் கட்டணங்கள் ஜூன் 1, 2022 அதாவது இன்று முதல் அமலுக்கு வந்தன.   


மேலும் படிக்க |எல்பிஜி சிலிண்டர் மானியம்; புதிய விதிகளை அறிந்து கொள்ளவும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR