எஸ்பிஐ வீட்டுக் கடன்: வீட்டை கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார் என்று ஒரு பழமொழி உண்டு. இவை இரண்டுமே மிகவும் சவாலானவை என்பதை உணர்த்தும் வகையில் இந்த பழமொழி கூறப்பட்டுள்ளது. வீடு வாங்குவது அல்லது வீட்டை கட்டுவது அனைவருக்கும் உள்ள ஒரு கனவு. அந்த வகையில், வீட்டு கடன வாங்குபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) வாடிக்கையாளராக நீங்களும் இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மிக முக்கியமானது. கிரீன் ஃபண்டிங்கின் கீழ் வழங்கப்படும் வீட்டுக் கடன் விதிகளில் முக்கிய மாற்றங்களைச் செய்ய பாரத ஸ்டேட் வங்கி (SBI) திட்டமிட்டுள்ளது. எஸ்பிஐ கிரீன் ஃபைனான்ஸ் திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு இது பொருந்தும். இந்த திட்டத்தின் கீழ், ஜூன் மாதம் வரை ரூ.6.3 லட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்க எஸ்பிஐ ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சோலார் மின் திட்டம்


SBI தனது புதிய விதிகளில், கிரீன் ஃபண்டிங்கின் கீழ் வழங்கப்படும் வீட்டுக் கடன் பெற்றவர்கள், சோலார் மின் திட்டத்தாஇ பயன்படுத்தும் வகையில் மேற்கூரை சோலார் நிறுவலை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது. வரும் நாட்களில் எஸ்பிஐ வங்கி (State Bank of India) வீட்டுக் கடன் வழங்க இந்த முக்கிய விதி கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது. இந்த விதி அமல்படுத்தப்பட்டால், எஸ்பிஐ கிரீன் ஃபைனான்ஸ் திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன் வாங்குபவர்கள், அவர் வாங்கும் வீடுகளின் கூரையில் சோலார் யூனிட்களை நிறுவியிருந்தால் மட்டுமே கடன் கிடைக்கும். அத்தகைய வீடுகளுக்கு மட்டுமே எஸ்பிஐ கடன் கொடுக்க அனுமதிக்கும்.


வீட்டுக் கடன்


இதனுடன், சோலார் தகடு செலவுகள் மற்றும் பசுமை நிதியத்தின் தனிப்பட்ட வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கான கடன் தொகையை எஸ்பிஐ அங்கீகரிக்கும். இது குறித்து எஸ்பிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், வரும் காலங்களில் கட்டிடம் கட்டுபவர்கள் தங்கள் கூரையில் கூரை சோலார் பொருத்துவதை கட்டாயமாக்க வங்கி திட்டமிட்டுள்ளது என்றார். கீரின் ஃபைனான்ஸ் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வீட்டுக் கடன் விண்ணப்பதாரர்களுக்கு இது கட்டாயமாக்கப்படலாம். இந்த கடன் 10 முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கும்.


மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்க போறீங்களா... வட்டியில் சலுகை வழங்கும் SBI... மிஸ் பண்ணாதீங்க!


பசுமை நிதியளிப்பு திட்டம் என்றால் என்ன?


பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில், பசுமை நிதியின் நோக்கம் சுத்தமான காலநிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகும். இதில் சோலார் விளக்குகள், சோலார் , சோலார் பேனல்கள், மரம் வளர்ப்பு, பயோ கழிப்பறைகள் கட்டுதல் போன்றவை அடங்கும். உண்மையில், உலக வங்கி 2016 ஆம் ஆண்டில் ‘சோலார் ரூஃப்டாப்’ நிதியுதவியைத் தொடங்கியது. இந்த வழியில், உலக வங்கி உலகெங்கிலும் உள்ள பல்வேறு வங்கிகளுக்கு நிதி வழங்குகிறது. இதனால் சுத்தமான காலநிலை பிரச்சாரத்தை இணைக்க முடியும். SBI இன் பசுமை நிதித் திட்டம், மரங்களை நடுதல், உயிர் கழிப்பறைகள், சோலார் விளக்குகள், விளக்குகள், பேனல்கள் போன்ற சுத்தமான காலநிலையில் நேரடியாக கவனம் செலுத்தும் நடவடிக்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


வீட்டுக் கடன் வட்டியில் தள்ளுபடி


முன்னதாக, பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (SBI) வீட்டுக் கடன் வட்டியில் தள்ளுபடியை வழங்கத் தொடங்கியுள்ளது. வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கான தனித்துவமான திட்டத்தின் கீழ், இந்தியாவின் முன்னணி கடன் வழங்கும் வங்கியான எஸ்பிஐ 65 அடிப்படை புள்ளிகள் (bps) வரை சலுகைகளை வழங்கும் என்ற செய்தி வெளியாகியது. வீட்டுக் கடன் சலுகைக்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 31ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, சலுகைகள் சிபில் ஸ்கோர் அடிப்படையாகக் கொண்டது ஆகும். 


CIBIL மதிப்பெண் 750 - 800


CIBIL மதிப்பெண் 750-800 அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்கு சலுகை இல்லாமல் வீட்டுக் கடன் வட்டி விகிதம் 9.15% ஆகும். ஆனால் சலுகையின் கீழ் 8.70% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. இது தவிர, CIBIL மதிப்பெண் 700-749 உள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் இருந்து 55 bps சலுகை வழங்கப்படும். வங்கியின் சாதாரண வட்டி விகிதம் 9.35% ஆனால் அவர்களுக்கு 8.80% வீதத்தில் வீட்டுக் கடன் வழங்கப்படும்.


மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்க திட்டமா... EMI சுமையை குறைக்க சில டிப்ஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ