6 லட்சம் ரூபாய் ஸ்காலர்ஷிப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எப்படி பெறுவது?
Scholarship for students : பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரிலையன்ஸ், அதானி குழுமம், ஆதித்யா பிர்லா கேப்பிட்டல்ஸ் கல்வி உவித் தொகை அறிவித்துள்ளன. அதிகபட்சமாக 6 லட்சம் வரை பெறலாம். எப்படி பெறுவது என தெரிந்து கொள்ளுங்கள்.
முஸ்கான் கல்வி உதவித் தொகை திட்டம் (Muskaan Scholarship Program 2024)
Valvoline Cummins என்ற தனியார் நிறுவனம் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. Muskaan Scholarship Program 2024 என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் ஓட்டுநர்கள் (LMV/HMV), மெக்கானிக்ஸ், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதி: அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா, பீகார், புதுச்சேரி, சத்தீஸ்கர், கேரளா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, மேகாலயா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். முந்தைய வகுப்பில் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
உதவித் தொகை: ரூ. 12,000 வரை
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: அக்டோபர் 10
விண்ணப்ப முறை: ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே
அதானி குழுமம்
அதானி குழுமம் ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முதல் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு இந்த உதவித்தொகையை வழங்குகிறது. JEE, NEET, CLAT, CA தொடர்பான படிப்புகளை படிப்பதற்காக இந்த உதவித் தொகை வழங்குகிறது.
தகுதி: ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே. BA பொருளாதாரம், BSc பொருளாதாரம், BEc, B.E./B.Tech, M.Tech., MBBS, மற்றும் LLB ஆகிய படிப்புகளைப் படிக்கும் முதல் ஆண்டு மாணவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.
உதவித் தொகை: ஆண்டுக்கு ரூ. 3,50,000 (கல்வி கட்டணம்).
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: அக்டோபர் 7
விண்ணப்ப முறை: ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே
SBI அறக்கட்டளை
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்காலர்ஷிப் திட்டங்களில் ஒன்றான SBIF Asha உதவித்தொகை திட்டம் 2024, SBI அறக்கட்டளை மூலம் கொடுக்கப்படுகிறது. இந்த உதவித்தொகையானது இந்தியா முழுவதும் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு அவர்களின் கல்வியின் தொடர்ச்சியை உறுதி செய்யும் வகையில் நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தகுதி: 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கும், முதல் 100 NIRF பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகளைச் சேர்ந்த இளங்கலை & முதுகலை மாணவர்களுக்கும், IIT களில் இருந்து இளங்கலை மாணவர்கள் மற்றும் IIM களில் இருந்து MBA/PGDM படிப்புகளைப் படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
உதவித் தொகை: வகுப்புகள் 6 முதல் 12 வரை: தலா ரூ. 15,000; UG மாணவர்கள்: ரூ. 50,000 வரை; முதுகலை மாணவர்கள்: ரூ.70,000 வரை; ஐஐடி UG மாணவர்கள்: ரூ 2,00,000 வரை; ஐஐஎம்எம்பிஏ மாணவர்கள்: ரூ. 7,50,000 வரை
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: அக்டோபர் 20
விண்ணப்ப முறை: ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே
ஆதித்யா பிர்லா கேபிடல்
ஆதித்யா பிர்லா கேபிடல் ஸ்காலர்ஷிப் திட்டம் 2024-25 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இளங்கலைப் படிப்பு, தொழில்முறை இளங்கலைப் படிக்கும் மாணவர்கள்.
உதவித் தொகை: ரூ. 60,000 வரை (ஒரு முறை)
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: அக்டோபர் 15
விண்ணப்ப முறை: ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே
ரிலையன்ஸ் உதவித் தொகை
ரிலையன்ஸ் குழுமம் முதுகலை கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை அறிவித்துள்ளது.
தகுதி: முதல் ஆண்டு முழுநேர முதுகலை படிப்புகளில் படிக்கும் மாணவர்கள். பொறியியல், தொழில்நுட்பம், லைப் சயின்ஸ் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். GATE தேர்வில் 550 முதல் 1,000 வரை பெற்றிருக்க வேண்டும் அல்லது அவர்களின் இளங்கலை CGPA, 7.5 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை: பட்டப்படிப்பு முழுவதும் ரூ. 6,00,000 வரை
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: அக்டோபர் 6
விண்ணப்ப முறை: ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே
*பின்குறிப்பு : குறிபிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களுக்கு சென்று கூடுதல் தகவல்களை தெரிந்து கொண்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனமாக விண்ணப்பிக்கவும்*
மேலும் படிக்க | திருப்பதி போறவங்களுக்கு குட்நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ