இணையத்தை கவர்ந்த புனே பணிப்பெண்ணின் வைரல் விசிட்டிங் கார்ட்..!
புனே பணிப்பெண்ணின் வைரல் விசிட்டிங் கார்ட் இணையவாசிகளின் கவனத்தை கவர்ந்துள்ளது!!
புனே பணிப்பெண்ணின் வைரல் விசிட்டிங் கார்ட் இணையவாசிகளின் கவனத்தை கவர்ந்துள்ளது!!
இந்த உலகை சுற்றிலும் எத்தனையோ சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டுதான் உள்ளது. அவற்றில் சில மக்களின் கவனத்தை ஈர்த்து வைரளாகி வருகிறது. இந்நிலையில், வீட்டு வேலை செய்யும் ஒரு பெண் தனது வேலைக்கும் விசிட்டிங் கார்டு தயார் செய்துள்ளது இணையத்தில் வைரளாகி வருகிறது.
"செய்யும் தொழிலே தெய்வம்" என்ற பழமொழிக்கு அர்த்தாம்... தான் எந்த தொழில் செய்தாலும் அது நமது வாழ்க்கைக்கு துணையாய் நிற்கும் தெய்வம் என்பது தான். தான் செய்யும் தொழிலை மற்றவர்களுக்கு தெரிய படுத்துவதற்காக நாம் விசிட்டிங் காட்டு அட்சடிப்பதும், அதை நாம் அன்றாடம் சந்திப்பவர்களிடம் கொடுப்பதும் வழக்கம். இந்நிலையில், வீட்டு வேலை செய்யும் ஒரு பணிப்பெண் தனது வேலைக்கும் விசிட்டிங் கார்டு தயார் செய்துள்ளது இணைய வாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்க்கு பின்னால் இருக்கும் கதையை நீங்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். இந்த சம்பவம் குறித்த முழு தகவலை அஸ்மிதா ஜவ்தேகர் என்ற பெண் தனது முகநூளில் இது குறித்த அத்தியாயத்தை பதிவிட்டுல்லத்தை தொடர்ந்து இணையத்தில் வைரலாகியுள்ளது.
புனேவில் இருக்கும் பவ்தன் என்ற ஏரியாவில் வீட்டு வேலை செய்து கொண்டிருப்பவர் கீதா காலே. அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வீட்டில் அவருக்கு வேலை இல்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் சோகமடைந்த கீதா மற்றொரு வீட்டில் வேலை செய்ய சென்றுள்ளார். அவர் சோகமாக இருப்பதை கண்டறிந்த அந்த வீட்டின் உரிமையாளர் தானாஸ்ரீ ஷிண்டே கீதாவிற்கு உதவ முன்வந்தார்.
ஒரே நாள் இரவில் கீதாவிற்காக பிஸினஸ் கார்ட் ஒன்றை உருவாக்கி அதனை 100 ப்ரிண்டுகளும் அடித்து கொடுத்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் இந்த பிஸினஸ் கார்ட் சென்று சேர புனேவின் ஹாட்டாப்பிக்காக மாறினார் கீதா.
அந்த கீதாவின் பிஸினஸ் கார்டில் பவ்தனில் வீட்டு வேலை செய்ய கீதா இருப்பதாக அறிவித்து, அதன் கீழே அவருடைய அலைபேசி எண் மற்றும் எந்தெந்த வேலைக்கு எவ்வளவு தொகையை கட்டணமாக பெறுகிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஆதார் கார்ட் வெரிஃபை செய்யப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிட அவருக்கு வேலையும் கிடைத்தது. கீதாவுக்கு "இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வேலை வாய்ப்புகள்" கிடைத்து வருகின்றன, மேலும் அவர் மகிழ்ச்சியடைகிறார். அவரது கதை இப்போது வைரலாகிவிட்டது. "மேலும், இது ஒரு நல்ல இதயத்தில் ஒரு சிறிய மினுமினுப்புடன் தொடங்கியது, அதன் சுடரை மற்றொரு மெழுகுவர்த்தியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது," அஸ்மிதா கூறினார்.