கிரகங்களின் ராசி மாற்றமும் நிலை மாற்றமும் மனிதர்களின் ஜாதகங்களில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. கிரக மாற்றங்களின் விளைவு ஒரு நபரின் வாழ்க்கையில் சுபமாகவும் இருக்கலாம், அசுபமாகவும் இருக்கலாம். கிரகங்களின் இயக்கத்தில் சூரியனின் இயக்கம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் 15, 2022 அன்று சூரியன் தனது ராசியை மாற்றி மீன ராசியில் பிரவேசிக்கப் போகிறார். சூரியனின் இந்த சஞ்சாரம் பல ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். மீன ராசி சூரியனின் நட்பு ராசியாக இருப்பதால், இது 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் கௌரவம், வெற்றி, தன்னம்பிக்கை ஆகியவற்றின் காரணியான சூரியனின் சஞ்சாரத்தால் மகத்தான பலன்களைப் பெறுவார்கள்.


ரிஷபம்: 
ஜோதிடத்தின்படி, 6 நாட்களுக்குப் பிறகு, ரிஷப ராசியின் வருமான ஸ்தானத்தில் சூரிய பகவான் நுழையவுள்ளார். இந்நிலை ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும். இதுமட்டுமின்றி, இந்தப் மாற்றத்தின் மூலம் புதிய வருமான வழிகள் திறக்கப்படும். இதனால் தொழிலதிபர்களுக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நேரம் முதலீட்டுக்கு சாதகமான நேரமாக இருக்கும். குறிப்பாக இந்த நேரத்தில் சொத்தில் முதலீடு செய்வது நன்மை தரும்.


மிதுனம்: 


மிதுன ராசியின் வேலை மற்றும் வியாபார ஸ்தானத்தில் சூரியன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அல்லது தற்போது இருக்கும் வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். தொழிலதிபர்கள் லாபம் அடைவார்கள். அரசியலில் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் பெரிய பதவியைப் பெறக்கூடும்.


மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் அமோகமாக இருக்கும்..!! 


கடகம்: 


இந்த ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் மிகவும் நன்மை பயக்கும் வகையில் இருக்கும். இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட வீட்டில் சூரியன் சஞ்சரிப்பார். இது அவர்களின் செல்வத்தையும் வளத்தையும்  அதிகரிக்கும். கடக ராசிக்காரர்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி உண்டாகும். தொழிலாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, அனைத்திலும் கடக ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். சூரியனின் இந்த மாற்றத்தின் போது, பெரிய பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் இந்த நேறம் கடக ராசிக்காரர்களுக்கு லாட்டரி அடித்தது போன்ற அதிர்ஷ்டம் உண்டாகும். 


தனுசு: 


தனுசு ராசியின் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால், மகிழ்ச்சி மற்றும் செல்வத்திற்கு குறை இருக்காது. இந்த நேரத்தில், அவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். செல்வமும் சொத்தும் பெருகும். சூரியனின் பெயர்ச்சி காலத்தில் புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் இருக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். பிராபர்டி துறை, அதாவது சொத்து வாங்கி விற்பது சம்பந்தமான வேலைகளை செய்பவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.) 


மேலும் படிக்க | கிரக மாற்றம்: அடுத்த 21 நாட்களுக்கு இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம், செல்வம் பெருகும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR