கொரோனா தொற்றால் உயிரிழந்த இருவரின் உடல்களை மறந்துபோய் 16 மாதங்கள் ஆகியும் தகனம் செய்யாமல் மருத்துவமனை பிணவறையிலேயே வைத்திருந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் துர்கா சுமித்ரா (வயது 40) மற்றும் முனிராஜ் (வயது 50) ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் (Covid Infection) பாதிக்கப்பட்டு பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 


பின்னர் 2020, ஜூலை 2ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அந்த நேரத்தில், கொரோனா முதல் அலை உச்சத்தில் இருந்ததால் , நோயாளிகளின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல், மருத்துவமனை நிர்வாகமே தகனம் செய்தது. இதனால், நோயாளிகளின் உறவினர்களுக்கு தகவல் சொல்லப்பட்டதுடன், உடல்கள் தகனம் செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் சொல்லப்பட்டுள்ளது.


ஆனால், கிட்டத்தட்ட 16 மாதங்களுக்கு மேலாக இருவரது உடல்களும் மருத்துவமனையின் பிணவறையிலேயே இருந்துள்ளது. பழைய பிணவறையை (Hospital Mortuary) சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள் துர்நாற்றத்தை உணர்ந்து அங்கு தேடிப்பார்த்ததில், குளிர்சாதனப்பெட்டியில் பாதி அழுகிய நிலையில் இருந்த இரு சடலங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 


READ ALSO | இனி மாஸ்க் அணியாமல் இருந்தால் அபராதம்


கொரோனா பாதிப்பினால் மரணங்கள் குறைந்துவிட்டதால், பழைய பிணவறை பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது. அதனால், குளிர்சாதனப்பெட்டியில் இருந்த இருவரின் உடல்களை கவனிக்கவில்லை எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


தற்போது இந்த தகவல் இருவரின் குடும்பத்தினருக்கும் தெரிய வந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்லனர். மருத்துவமனையின் இந்த அலட்சிய போக்கை பலரும் கண்டித்துள்ளனர். பல்வேறு அமைப்பினரும், அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்து, தவறுக்கு காரணமான மருத்துவமனை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.


Also Read | தமிழ்நாடு: டிசம்பர் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR