Winter Bathing Tips | குளிர்காலம் வந்துவிட்டாலே மழைக்கால நோய்கள் எல்லாம் வரிசைகட்டி வந்துவிடும். சளி முதல் காய்ச்சல் வரை, மலச்சிக்கல் முதல் வாயு பிரச்சனை என வரிசையாக வந்து கொண்டே இருக்கும். ஆனால், ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டு, உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் இவற்றில் இருந்து எல்லாம் மீண்டு வந்துவிடலாம். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, குளிர்காலம் வந்தாலே பலருக்கும் ஒரு சந்தேகம் வந்துவிடும். குளிர்ந்த நீரில் குளிக்கலாமா? குளிக்கக்கூடாதா? என அடிக்கடி யோசிப்பார்கள். சிலர் சூடான நீரில் மட்டுமே குளிக்க வேண்டும் என தினமும் சுடு தண்ணீரில் குளிப்பார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உண்மையில் குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது என்றெல்லாம் எந்த கட்டுப்பாடும் இல்லை. அவரவர் உடல் நிலையை பொறுத்து எந்த தண்ணீரில் வேண்டுமானாலும் குளிக்கலாம். ஆனால், குளிர் காலத்தில் ஜில்லென குளிர் நீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் குளிர்ந்த நீரில் குளிப்பதால் சில நன்மைகள் இருக்கின்றன.


குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் : 


குளிர்ந்த நீரில் குளித்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராகும். குளிர்ந்த நீர் உடலில் பட்டால் இரத்த நாளங்கள் சுருங்கி பின்னர் விரிவடையும். இதன் காரணமாக இரத்த ஓட்டம் மேம்படும். குளிர்ந்த நீரில் குளித்தால் உடல் புத்துணர்ச்சி அடைவதுடன் சோம்பல் நீங்கும். இதனால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி ஏற்படும். இது தவிர, குளிர்ந்த நீரும் உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது. மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்கவும் உதவுகிறது. குளிர்ந்த நீரில் குளிப்பது உங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இது முடி மற்றும் சருமத்தின் பொலிவை அதிகரிக்கிறது. இது முடியை பலப்படுத்துகிறது. முடி உடைவது உதிர்வது ஆகியவற்றை தடுக்கிறது. 


குளிர்ந்த நீரில் குளிப்பதால் தீமைகள்


நீங்கள் குளிர்ந்த நீரில் குளித்தால், உங்கள் உடல் வெப்பநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு சளி மற்றும் இருமல் ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் காய்ச்சல் வரலாம். குளிர்ந்த நீரில் குளிப்பதும் பக்கவாதத்தை ஏற்படுத்தும். இதயம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு குளிர்ந்த நீரில் குளிப்பது ஆபத்தானது. ஏனெனில் இது இதயத்தில் அழுத்தத்தை அதிகரிக்கும். அதே நேரத்தில், ஆஸ்துமா நோயாளிகளும் குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிப்பது சுவாச பிரச்சனைகளை அதிகரிக்கும்.


 


மேலும் படிக்க | குளிர்காலத்தில் இந்த மசாலா பொருட்களை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டாம்!


மேலும் படிக்க | தைராய்டு பிரச்சனையின் முக்கிய அறிகுறிகள் இவைதான்: ஜாக்கிரதை!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ