கமல்ஹாசன் Bigg Boss தொகுப்பாளர்; அப்போ...மகள் ஸ்ருதிஹாசன்...
அப்பா கமல்ஹாசனைப் போன்று நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறிய ஸ்ருதிஹாசன்....
அப்பா கமல்ஹாசனைப் போன்று நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறிய ஸ்ருதிஹாசன்....
தமிழ் திரையுலகிற்கு இயக்குநர் முருகதாஸ் இயக்கய 7-ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். இப்படத்தில், தனது நடிப்பால் பல ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர் இவர். இதையடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இவருக்கு 3 படத்திற்கு பின்னர் ரசிகர் பட்டாளம் அதிகம். இந்நிலையில், தமிழ் சினிமாவின் பல நடிகர், நடிகைகள் தொலைக்காட்சி தொகுப்பாளராக மாறிவருகின்றனர். சமீபத்தில், தமிழக மக்களிடம் நல்ல வரவேற்ப்பு பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதையடுத்து, தற்போது தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ’ஹலோ சகோ’ என்ற நிகழ்ச்சியை நடிகை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கான புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் பிரபலம் யார் என்பதை சஸ்பென்ஸுடன் வைத்திருக்கும் காட்சிகளும் இந்தப் புரமோ வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன.
அவரைத் தொடர்ந்து நடிகர் விஷால், வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் தொகுப்பாளர்களாக மாறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது....!