Astrology: சுக்கிரன் பெயர்ச்சியினால் குபேரன் ஆகப் போகும் ‘3’ ராசிக்காரர்கள்..!!
சுக்ரன் கிரகத்தைப் பற்றி பேசுகையில், இந்த கிரகம் ஆடம்பர வாழ்க்கை, திருமண வாழ்க்கை, காதல், அழகு, ஆகியவற்றின் காரணியாகும். சுக்கிரன் லாப காரணியாக கருதப்படுகிறது.
செல்வம், மகிழ்ச்சி மற்றும் சொத்துக்களுக்குக் காரணமான சுக்கிரன் கிரகம் விரைவில் ராசியை மாற்றப் போகிறது. ஜோதிட சாஸ்திரப்படி மார்ச் 31ம் தேதி காலை சுக்கிரன் கும்ப ராசிக்குள் நுழைகிறார். தற்போது சுக்கிரன் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு அதிபதியாக கருதப்படுகிறது. சுக்கிரனின் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் பதினொன்றாம் வீட்டில் அதாவது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். சுக்கிரன் காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் பொருளாதார வளம் பெறுவார்கள். இதனுடன், வியாபாரத்தில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணத்திற்கு 2வது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார முன்னேற்றம் மிக வேகமாக இருக்கும்.
மேலும் படிக்க | காதல் உறவை ஒரு போதும் கைவிடாத ‘5’ ராசிக்காரர்கள்..!!
மிதுனம்
சுக்கிரன் மிதுன ராசிக்கு 9ம் வீட்டில் பிரவேசிக்கப் போகிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் இருந்து சஞ்சரிப்பது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். இதனுடன், வேலை மற்றும் வியாபாரத்தில் பல பண லாப ஆதாரங்கள் இருக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வீடு, சொத்துக்களை வாங்கலாம். மேலும், கூட்டுத் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். மேலும் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உண்மையில் சுக்கிரனின் சஞ்சாரம் இரண்டாம் வீட்டில் நடக்கப் போகிறது. ஜாதகத்தின் இரண்டாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கும் போது, செல்வம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்கள் இழந்த பணத்தை திரும்பப் பெறுவர். இது தவிர, வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் செய்யலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்கவில்லை.)
மேலும் படிக்க | சூரியனின் சஞ்சாரம் இந்த ‘5’ ராசிகளுக்கு அளவிட முடியாத செல்வத்தைத் தரும்!