ஃப்ரிட்ஜில் வைத்த உணவை சாப்பிவதால் இவ்வளவு பாதிப்புகள் வருமா?
பொதுவாக ஆயுர்வேதத்தின்படி உணவை தயாரித்த சில மணி நேரங்களிலேயே சாப்பிடுவது தான் உடலுக்கு ஆரோக்கியம் என்று பரிந்துரைக்கப்படுகிறது,
காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் பால் பொருட்கள், உணவுப்பொருட்கள் போன்றவற்றை கெட்டுப்போகாமல் பாத்துக்க ஃப்ரிட்ஜ் பயன்படுகிறது. பல வீடுகளில் மனிதர்களை மட்டும் தான் ஃப்ரிட்ஜிற்குள் தூக்கி வைக்கவில்லை மற்றபடி உணவு பொருள் தொடங்கி நெயில் பாலிஷ் வரை அனைத்து பொருட்களையும் ப்ரிட்ஜிற்குள் வைத்திருக்கின்றனர். இந்த சாதனத்தின் மூலம் உணவு பொருட்கள் வீணாகி போவதையும், பழமையான உணவில் பாக்டீரியா வளர்ச்சியால் நம்மைத் தாக்கும் நோய்கள் உருவாவதையும் தவிர்க்க முடியும். இருப்பினும் இவ்வாறு ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் உணவுகள் நமக்கு ஆரோக்கியமானதா இல்லையா என்பது பற்றி பலருக்கும் பல கருத்துக்கள் இருந்து வருகின்றது. ஆயுர்வேதத்தின்படி உணவை தயாரித்த சில மணி நேரங்களிலேயே சாப்பிடுவது தான் ஆரோக்கியம் என்று பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் நமது வேகமான வாழ்க்கை முறையின் காரணமாக நம்மால் அதுபோன்று சாப்பிடமுடியாமல் ப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டு வருகிறோம்.
மேலும் படிக்க | இரட்டை கன்னம் முக அழகை கெடுக்கிறதா... சில ‘எளிய’ பயிற்சிகள் செய்தால் போதும்!
பொதுவாக ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட உணவின் சுவை அல்லது அமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாது, அந்த குளிர் தன்மை இறைச்சிகளின் சுவை அல்லது அமைப்பில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. ஆனால் காய்கறிகள் மீது சில சமயங்களில் குறைந்தபட்ச விளைவுகளை ஏற்படுத்துகிறது மற்றும் பழங்களில் அதிக மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஃப்ரிட்ஜில் பாக்டீரியாவின் செயல்பாடு குறைகிறது, அதனால் உணவு கெட்டுப்போவதற்கு அதிக நாட்கள் ஆகும். ஃப்ரீஸ் செய்யப்பட்ட நிலையில் உணவில் பாக்டீரியா வளர்ச்சி அடைவதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் ஃப்ரிட்ஜில் ஒரு பொருளை வைப்பதற்கு முன்னர் அந்த பொருளில் நுண்ணுயிர் மாசுபாடு எதுவும் இல்லாமல் இருக்கிறதா என்பதை உறுபடுத்திய பின்னரே அதனை குளிரூட்ட வைக்க வேண்டும். காய்கறிகளை ஃப்ரிட்ஜில் சேமித்து வைப்பதற்கு முன் கழுவ வேண்டும், சுத்தமாக கழுவாத பொருட்களில் உள்ள கிருமிகள் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டுள்ள மற்ற உணவுகளில் பரவிவிட வாய்ப்பு அதிகமுள்ளது. உணவைத் தொடும் முன் கைகளைக் கழுவுதல் மற்றும் உணவைச் சேமிக்க சுத்தமான பாத்திரங்களைப் பயன்படுத்துதல் போன்ற பாதுகாப்பான உணவுப் பழக்கங்களைப் கடைபிடிக்க வேண்டும். ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் உணவில் பாக்டீரியா வளர்ச்சி தடைபடும் என்றாலும், உணவின் நொதி கெட்டுப்போவது தொடர்ந்து நிகழ்கிறது, மேலும் உணவிலுள்ள சில வைட்டமின்களும் சிதைவடையக்கூடும்.
மேலும் படிக்க | அளவுக்கு அதிகமான புரதம் இதயம் - சிறுநீரகத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் நிபுணர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ