தந்தை பெரியாரின் கொள்கைகளை கடைப்பிடித்த கலைஞர், அவரது வாழ்நாள் கணக்கினையும் கடைப்பிடிக்க முயன்று தோல்வியடைந்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கலைஞர் கருணாநிதி அவர்களின் அரசியல் குருவான பெரியாவர் அவர்கள் இம்மண்ணுலகில் 34,432 நாட்கள் வாழ்ந்துள்ளார், அவரது சீடரான கலைஞர் அவரை விட வெறும் 33 நாட்கள் மட்டுமே குறைவாக மண்ணுலகில் பயணித்துள்ளார்.


1879-ஆம் ஆண்டு செப்., 17-ஆம் நாள் ஈரோட்டில் வெங்கட நாயகர் மற்றும் சின்னத்தாயி தம்பதியருக்கு மகனாய் பிரந்தவர் EV ராமசாமி அவர்கள். பிற்காலத்தில் அனைவராலும் பெரியார் என அழைக்கப்பட்ட இவர் 1973-ஆம் ஆண்டு டிச., 24-ல் இம்மண்ணுலகை விட்டு பிரிந்தார்.


1924-ஆம் ஆண்டு ஜூன்., 3-ஆம் நாள் நாகப்பட்டினத்தின் திருக்குவலை என்னும் கிராமத்தில் முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதியருக்கு மகனாய் பிறந்தவர் கருணாநிதி. பிற்காலத்தில் அனைவராலும் கலைஞர் என அன்போடு அழைக்கப்பட்ட இவர் 2018-ஆம் ஆண்டு ஆக., 7-ஆம் நாள் உயிரிழந்தார்.


வாழ்நாள் கணக்கில் தந்தை பெரியார் அவர்கள் 34,432 நாட்கள் மண்ணுலகில் பயணித்தார். அதேப்போல் கலைஞர் கருணாநிதி அவர்கள் 34,399 பயணித்துள்ளார். அதாவது தனது அரசியல் குருவான பெரியாரை விட 33 நாட்கள் மட்டுமே குறைவாக பயணித்துள்ளார்.


இருபெரும் தலைவர்களின் வாழ்நாள் கணக்கு ஒரு பார்வை....


  தந்தை பெரியார் கலைஞர் கருணாநிதி
பிறப்பு 17 செப்டம்பர் 1879 3 ஜூன்1924
இறப்பு 24 டிசம்பர் 1973 7 ஆகஸ்ட் 2018
வாழ்நாட்கள் 34,432 34,399
வயது 94 ஆண்டு, 3 மாதம், 8 நாள்

94 ஆண்டு, 2 மாதம், 5 நாட்கள்