Anant Ambani Radhika Merchant Graha Shanti Ceremony: உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரும், இந்தியாவின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் திருமணம் வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெறுகிறது. மும்பையில் உள்ள ஜியோ வோல்ர்ட் கன்வென்ஷன் சென்டரில் ஜூன் 12 முதல் மூன்று நாள்களுக்கு திருமணம் நடைபெறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணத்தை முன்னிட்ட நிகழ்வுகளும், சடங்குகளும் சமீப நாள்களாக மும்பையில் நடைபெறுகிறது. ஜூலை 3ஆம் தேதி குஜராத் முறைப்படி மாமேரு நிகழ்வும், ஜூலை 5ஆம் தேதி சங்கீத் நிகழ்வும் நடைபெற்றது. மாமேரு நிகழ்வில் குடும்பத்தினர், உறவினர்களே அதிகம் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி - நிதா அம்பானியின் அண்டிலியா இல்லத்தில் நடைபெற்றது. 


கவனம் ஈர்த்த பிரபலங்கள்


தொடர்ந்து, ஜியோ கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற சங்கீத் நிகழ்வில் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி பாலிவுட் உள்ளிட்ட திரை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் என பலரும் கலந்துகொண்டனர். பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பைபரின் இசை நிகழ்ச்சியும் சங்கீத் நிகழ்வில் நடந்தது. மாமேரு நிகழ்ச்சியிலும் சரி, சங்கித் நிகழ்ச்சியிலும் சரி இஷா அம்பானி (Isha Ambani), ஜான்வி கபூர் (Janhvi Kapoor) என பலரின் உடைகளையும் மிகுந்த கவனத்தை பெற்றன.


மேலும் படிக்க | மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி... அப்படி என்ன அவரின் காஸ்ட்யூமில் ஸ்பெஷல்?


குறிப்பாக, அனைத்து நிகழ்ச்சிகளிலும் அம்பானி, மெர்ச்சன்ட், மேத்தா குடும்பத்தினர் கண்களை கவரும் பிரத்யேகமான ஆடைகள், ஆபாரணங்களுடன் வந்திருந்தனர். அவர்களின் ஒவ்வொருவரின் ஆடையும் சரி இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டவை. அவற்றின் விலையும் பல லட்சங்களை தொடும் எனலாம். அப்படி நடிகைகள் முதல் பல பிரபலங்கள் வரை மிடுக்காக நிகழ்ச்சியில் வலம் வந்தனர். 


எளிய தோற்றத்தால் ஈர்த்த பெண்


அந்த வகையில், மணமகள் ராதிகா மெர்ச்சன்ட் வீட்டில் நடைபெற்ற கிரக சாந்தி பூஜையில் ஒரு பெண்மணி மட்டும் மிக எளிமையாக தோற்றமளித்தார். குறைந்த அலங்காரம், எளிமையான ஆபாரணங்கள், பேன்சியாக இல்லாத ஆடை என எளிமையாக இருந்தாலும் தனித்துவமாக அழகாக தோற்றமளித்தார். அவரின் முன்னால் பலரும் பொலிவிழந்துவிட்டார்கள் என்றால் பாருங்களேன்... சடங்குகளை முழுவதுமாக பதிவுசெய்யப்பட்ட கேமராவில்தான் அவரும் பதிவாகியிருந்தார்.


அந்த நிகழ்வில் எளிமையான தோற்றம் கொண்ட அந்த பெண்மணி தனது கணவனுடன் வருகை தந்தார். கோல்டன் பார்டர் உடன் கூடிய மேரூன் நிற சேலையில் அவர் வந்திருந்தார், பார்ப்பதற்கே அந்த சேலை அவ்வளவு அழகாக இருந்தது. சேலையிலும், பார்டரிலும் சிறு நுணக்கமான வேலைப்பாடுகள் இருந்தன.


அஞ்சலி மெர்ச்சன்ட் யார் தெரியுமா?


அந்த சேலைக்கு அந்த பெண்மணி ஹை-நெக் கோல்டன் நிற பிளவுஸை அணிந்திருந்தார். அது அவரது அழகை மட்டுமின்றி அவரது எளிமையையும் கூட்டியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து விருந்தினர்கள் எக்கச்சக்க விலை உயர்ந்த ஆபரணங்களை அடுக்கடுக்காக அணிந்து வந்த நிலையில், இந்த பெண்மணி அதிலும் எளிமை காட்டினார். தோடுகள், நெத்திச்சுட்டி, கழுத்தில் சில மாலைகளை அணிந்திருந்த அவர் வைரத்திலான பிரேஸ்லட்டை அணிந்திருந்தார்.



அழகும், எளிமையும் நிரம்பி வழிந்த அந்த பெண்மணி வேறு யாரும் இல்லை. அவர் மணப்பெண் ராதிகா மெர்ச்சன்டின் மூத்த சகோதரி அஞ்சலி மெர்ச்சன்ட். இவருக்கு திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. அவருடைய தந்தையின் நிறுவனத்தில் அஞ்சலி முக்கிய பொறுப்பை வகிக்கிறார். இயற்கையாக அழகிய தோற்றம் கொண்ட அஞ்சலி தனது எளிமையான தோற்றத்தால் நிகழ்ச்சியின் மொத்த கவனத்தையும் தன் மீது திருப்பிவிட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.


மேலும் படிக்க | மயிலாகவே மாறிய 'சின்ன மயிலு...' ஆளை மயக்கும் ஆடையில் ஜான்வி - காஸ்ட்யூம் என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ