தடுப்பூசி போட்டும் நடவடிக்கையின் மூன்றாம் கட்டத்தில், 2021 மே 1 ஆம் தேதி இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிக் கொள்ளலாம் என அறிவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவரின் பெயர், வயது, புகைப்பட ஐடி விவரங்களை பதிவு செய்வதன் மூலம் அரசின் கோவின் தளத்தில், தாங்கள் விரும்பும் தடுப்பூசி மையத்தில் தடுப்பூசியை பதிவு செய்ய வேண்டும். 


COVID-19 தடுப்பூசிகளின் தேவைக்கும் சப்ளைக்கும் இடையில் பெரிய இடைவெளியுடன் ஒரு சவாலாக மாறியுள்ள நிலையில், தடுப்பூசிக்காக வெற்றிகரமாக புக்கிங்  சில டிப்ஸ்களை கடைபிடிக்கலாம்


தடுப்பூசி பெறுவதற்கான பிரத்யேக கோவின் போர்ட்டல் மற்றும் ஆரோக்யா சேது செயலிகளில் இலவச மற்றும் கட்டண தடுப்பூசிகளுக்காக புக்கிங் செய்வது சவாலாகவே உள்ளது.


ALSO READ | அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு; சானிடைசரை அதிகம் பயன்படுத்துவதும் ஆபத்து


 


தடுப்பூசி ஸ்லாட்டை பதிவு செய்வதற்கான டிப்ஸ் 


உங்கள் மொபைல் எண் மற்றும் தேவையான விவரங்களை முதலில் கோவின் போர்ட்டலில் பதிவு செய்யுங்கள். இது  தடுப்பூசியை புக் செய்வதற்கான செயல்முறையையும் மிகவும் எளிதாக்கும். முன் கூட்டீயே இவைகளை செய்து விட்டால், புக் செய்ய உள்நுழையும் போது, கொடுக்கப்பட்ட இடத்தில் உங்கள் 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிட்டு, OTP ஐ உள்ளிட்டால் போதும்


கோவின் போர்ட்டலில் 24 மணி நேரமும் தடுப்பூசி இடங்கள் அப்டேட் செய்யப்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வழக்கமாக ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை தடுப்பூசிக்காக அப்டேட்டுகள் சேர்க்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. எனவே, நீங்கள் அந்த நேரத்தில் காலியான இடங்களை அறிந்து கொண்டு புக் செய்யலாம்


காலியிடங்கள் உள்ளதா என்பதை அறியும் போது, ​​உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுடன் உள்நுழைவதை எப்போதும் உறுதிசெய்து கொள்ளவும், இதன் மூலம் தடுப்பூசிக்கான முன்பதிவை எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம்.


கோவின் போர்ட்டலில் ஸ்லாட்டுகளுடன் கூடிய தடுப்பூசி மையத்தைக் கண்டறிய இரண்டு வழிகள் உள்ளன - ஒன்று அஞ்சல் குறியீட்டை (PIN code) உள்ளிடுவதன் மூலம் கண்டறியலாம். இரண்டாவது மாநிலம் மற்றும் மாவட்டத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் கண்டறியலாம். இருப்பினும், அஞ்சல் குறியீட்டை (PIN code) உள்ளிடுவதன் தடுப்பூசி மையத்தைத் கண்டறிவது சிறந்த முறையாக கருதப்படுகிறது.


COVID-19 தடுப்பூசிக்கு ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி
கோவின் போர்ட்டலுக்குச் சென்று பதிவு / உள்நுழைவு ஆப்ஷனை க்ளிக் செய்யவும்


மொபைல் எண்ணை உள்ளிட்டு 'Get OTP' ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, பக்கத்தில் OTP ஐ உள்ளிட்டு 'Enter' விருப்பத்தை க்ளிக் செய்யவும்


தடுப்பூசிக்கான பதிவு பக்கத்தில் கிளிக் செய்து, புகைப்பட ஐடி ஆதாரம், பெயர், பாலினம் மற்றும் பிறந்த ஆண்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளிடவும். 'பதிவு' என்பதைத் க்ளிக் செய்யவும்


தடுப்பூசி பெறுவதற்கான நேரம் மற்றும் நாளை திட்டமிட பதிவுசெய்த நபரின் பெயருக்கு 'Schedule next' என்பதைக் கிளிக் செய்க.


அஞ்சல் குறியீட்டை உள்ளிட்டு தேடல் பட்டனை கிளிக் செய்யவும், வலைத்தளம் அந்த அஞ்சல் குறியீடு உள்ள மையங்களின் பட்டியலை காண்பிக்கும்


தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுத்து 'Confirm' ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.  நீங்கள் நான்கு உறுப்பினர்களுக்கான புக்கிங் செய்ய கோவின் வலைத்தளம் அனுமதிக்கிறது. அதற்கு நீங்கள் அவர்களது விபரங்களையும் கோவின் (CoWIN) தளத்தில் சேர்க்க வேண்டும்.


ALSO READ | பால் குடிப்பதால் நன்மைகள் மட்டுமல்ல, சிலருக்கு பாதிப்புகளும் உண்டு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR