யூடியூபில் வைரல் ஆகா வேண்டுமா? இத பண்ணா போதும்!
யூடியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று வைரல் ஆகா ஏழு எளிய வழிகளை பின்பற்ற வேண்டும்.
யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள் திறமைகளை வெளிக்காட்டி வெற்றிகாண்பதற்கு சிறந்த தளமாக உள்ளது. இதில் குறிப்பிட்ட ஒரு பிராண்டை விளம்பரப்படுத்துவதன் மூலம் வருவாயை ஈட்ட முடிகிறது. அதிக சாப்ஸ்க்ரைபர்கள் பெற்றிடவும், தொடர்ந்து பலரும் உங்கள் வீடியோவை பார்க்கும் வகையில் நீங்கள் சிறந்த பதிவுகளை பதிவிட வேண்டும். உங்களது ஒரு படைப்பு வைரலாகி விட்டால் உங்க சேனலை தேடி சாப்ஸ்க்ரைபர்கள் ஓடோடி வருவார்கள். வீடியோக்கள் வைரல் ஆனதால் தான் நீங்கள் பார்வையாளர்களை அதிகளவில் பெறமுடியும். யூடியூபில் நீங்கள் சாதிக்க ஏழு வகையான எளிய மந்திரங்கள் உள்ளது.
அந்த ஏழு மந்திரங்களை நீங்கள் பயன்படுத்தி விட்டீர்கள் என்றால் நீங்கள் எளிமையாக அதிக பார்வைகள், லைக்குகள், கருத்துகள் போன்றவற்றை பெறலாம். இப்போது உங்கள் வீடியோக்கள் யூடியூப்பில் வைரலாக பின்வரும் மந்திரங்களை ஃபாலோ செய்யுங்கள்.
மேலும் படிக்க | YouTube-ல் பணம் சம்பாதிக்க புதிய வழிகள்!
1) புதிய கன்டென்டுகளை உருவாக்கவும்:
இப்போது பார்வையாளர்களும் பயங்கர புத்திசாலிகளாக மாறிவிட்டனர், அதனால் ஒருவர் செய்த கண்டென்ட்டுகளை நீங்கள் காப்பியடித்து செய்தால் பார்வையாளர்கள் உங்களை வெறுக்க தொடங்கிவிடுவார்கள். அதனால் அரைத்த மாவையே அரைக்காமல் புதிது புதிதாக யோசித்து நீங்களே சுயமாக ஒரு கன்டென்டை உருவாக்குங்கள். அவ்வாறு நீங்கள் வித்தியாசமாக செய்யும்போது பார்வையாளர்களுக்கும் அது ஒரு புதுவித உணர்வை ஏற்படுத்தும், அதனால் உங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.
2) சுவாரஸ்யமான கண்டென்ட்டுகளை உருவாக்கவும்:
உங்கள் யூடியூப் வீடியோக்களில் அதிக பார்வைகளைப் பெற, நீங்கள் பார்வையாளர்களை கவரும் விதமான கண்டென்ட்டுகளை உருவாக்க வேண்டும். உங்கள் வீடியோக்களை ஒரு நல்ல கண்டென்ட்டுகளுடனும் அதனை திறமையாக எடிட் செய்தும் பதிவிட வேண்டும். இதன் மூலம் பார்வையாளர்கள் கவர்ந்திழுக்கப்படுவார்கள்.
3) உயர்தர வீடியோக்களை உருவாக்கவும்:
நீங்கள் பதிவிடும் வீடியோக்கள் உயர்ந்த தரத்தில் தெளிவாக இருக்க வேண்டும். பதிவிடக்கூடிய வீடியோக்கள் இருள் நிறைந்தும், மங்கலான மற்றும் ஒழுங்கற்ற முறையில் இருந்தால் அந்த வீடியோவை யாரும் ரசித்து பார்க்கமாட்டார்கள். நீங்கள் உயர்தர கேமராக்களை கொண்டு காட்சிகளை பதிவு செய்து சிறப்பான முறையில் அவற்றை எடிட் செய்து பதிவிட வேண்டும். தெளிவாக இருக்கும் வீடியோக்கள் தன பார்வையாளர்களை வெகுவாக கவரும்.
4) அடிப்படைச் சொல்லை பயன்படுத்தவும் (கீவேர்ட்ஸ்):
வீடியோவைப் பதிவேற்றும் போது அடிப்படைச் சொற்களை பயன்படுத்த வேண்டும். சில முக்கியமான வார்த்தைகளை நீங்கள் சேர்க்க வேண்டும். Google Search Console, SEMrush, SEOProfiler மற்றும் Moz போன்ற கருவிகள் உள்ளன, இவற்றை பயன்படுத்தி எளிதான வார்த்தைகளை பயன்படுத்துவதன் மூலம் பார்வையாளர்களால் உங்க வீடியோவை எளிதில் அடைய முடியும்
மேலும் படிக்க | இந்தியாவில் 35 யூடியூப் சேனல்களுக்கு தடை! காரணம் என்ன?
5) உங்கள் வீடியோவை நோக்கி கவனத்தை ஈர்க்க வேண்டும்:
உங்கள் சேனலில் வீடியோவை பதிவிட்டால் மட்டும் வைரலாகி விடாது, அந்த வீடியோவை நீங்கள் பல்வேறு சமூக ஊடக தளங்களிலும் வீடியோ இணைப்பையும், வீடியோவின் முன்னோட்டத்தையும் பதிவிட வேண்டும். Facebook, Twitter, Instagram மற்றும் LinkedIn போன்ற சமூக ஊடக தளங்களில் உங்கள் வீடியோவின் லிங்கை பதிவிட்டு அதன் மூலம் பார்வையாளர்களை பார்க்க செய்யலாம். யற்சி எடுப்பார்கள்.
6) சரியான தலைப்பைத் தேர்ந்தெடுங்கள்:
நீங்கள் பதிவிடும் வீடியோவை விட அந்த வீடியோவிற்கு நீங்கள் வைக்கும் தலைப்பு தான் முக்கியம். நீங்கள் வீடியோவிற்கு வைக்கும் தலைப்புகள் பார்வையாளர்களிடம் இந்த வீடியோவை பார்த்தே ஆகவேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும். தலைப்பு மோசமாகவோ அல்லது சராசரியாகவோ இருக்கும்போது, உங்கள் வீடியோவிற்கு அதிக பார்வைகள் கிடைக்காது. உங்கள் வீடியோவின் தலைப்பு மெட்டாடேட்டாவின் மிக முக்கியமான பகுதியாகும். இதன் விளைவாக, வீடியோ SEO என்று வரும்போது, வீடியோவின் தலைப்பில் உள்ள முக்கிய சொல்லைப் பயன்படுத்துவது அவசியம்.
7) பார்வையாளர் ஈடுபாட்டை உறுதிப்படுத்தவும்:
எப்போதும் உங்கள் பார்வையாளர்களை உங்களை நோக்கியே ஏற்கும்படி வைத்திருக்க வேண்டும். நீங்கள் பதிவிடும் வீடியோக்களை பார்வையாளர்கள் சேமித்து வைக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும், இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு பார்வையாளர்கள் அதிகமாகும். மேலும் உங்கள் வீடியோக்களை பார்வையாளர்கள் பகிரக்கூடிய வகையில் அமைக்க வேண்டும். உங்கள் சேனலின் ஆரம்ப நாட்களில் குறைந்த பார்வையாளர்கள் தான் கிடைப்பார்கள், நீங்கள் மென்மேலும் முயற்சி செய்து அவர்களை கவர கவர் உங்கள் நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு நீங்கள் யூடியூபில் பிரபலமாகி விடுவீர்கள்.
மேலும் படிக்க | ரிமோட் மூலம் டிவியை அணைக்கும் பழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR