மூளையை பாதிக்கும் கதிர்வீச்சு... தூங்கும் போது மொபைல் போனை தள்ளியே வைங்க..!!
இரவில் தூங்கும் போது மொபைலை தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டு தூங்கும் வழக்கம் பலருக்கு உள்ளது. இதனால், மோசமான பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
இன்றைய நிலையில் செல்போன் இல்லாமல் மக்களின் வாழ்க்கை முடங்கி விடும் நிலை உள்ளது. நாம் எங்கு சென்றாலும் முதலில் எடுத்துக் கொள்ள நினைப்பது நம் கைபேசியைத்தான். மொபைல் போன்கள் நமக்கு மிகவும் முக்கியமான ஒரு பொருளாகிவிட்டன. அதிலும், இப்போது பெரும்பாலானோர், தங்கள் மொபைல் போன்களுடன் கழிப்பறைக்குச் செல்கிறார்கள்.
நாம் போகும் எல்லா இடங்களுக்கும் கைபேசியை எடுத்துச் செல்லும் பழக்கம் உங்களுக்கு சாதாரணமாகத் தோன்றினாலும், அது உங்களுக்குப் பல வகைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதே சமயம் பலர் இரவு வெகுநேரம் வரை மணிக்கணக்கில் மொபைலைப் பயன்படுத்திவிட்டு தூங்கியவுடன் போனை தலையணைக்கு அருகில் வைத்துவிட்டு தூங்குகிறார்கள். தலையணைக்கு அருகில் கைபேசியை வைத்துக்கொண்டு தூங்கும் தவறை ஒருபோதும் செய்யக்கூடாது. இதனால் உங்களுக்கு பல இழப்புகள் ஏற்படலாம்.
இரவில் தூங்கும் போது மொபைலை தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டு தூங்கும் வழக்கம் பலருக்கு உள்ளது. இதனால், மோசமான பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு உங்கள் மூளையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக உங்களது மூளைத் திறன் பாதிக்கப்படுவதோடு (Brain Health), ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம், பதட்டம் போன்ற பிரச்சனைகள் வரலாம். என்கின்றனர்.
மொபைல் போன்களின் பயன்பாடு மிக அதிகமாகிவிட்ட நிலையில், அது நேரடியாக நம் ஆரோக்கியத்தை பாதிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, இது நம் வாழ்வில் மன அழுத்தத்திற்கு காரணமாகவும் மாறத் தொடங்கியுள்ளது. அதே சமயம் இரவில் தலையணைக்கு அருகில் மொபைல் போனை வைத்துக்கொண்டு தூங்கினால், உடனே இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களின் இந்த பழக்கம் உங்களுக்கு மிகவும் ஆபத்தானது. இது போன்ற சூழ்நிலையில், தூங்கும் போது மொபைல் போன் நம்மிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்க வேண்டும் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் தூங்கும் அறையில் மொபைல் போனை வைக்காமல் இருந்தால் நல்லது. அப்படி சாத்தியமில்லை என்றால், நீங்கள் தூங்கும் மூலையின் மறு மூலையில் உங்கள் மொபைல் போனை வைக்கலாம். ஆனால் சில காரணங்களால் உங்கள் மொபைலை உங்களுடன் வைத்துக்கொண்டு தூங்க விரும்பினால். அதை ஏர் பிளேன் மோடு என்னும் விமானப் பயன்முறையில் வைக்க மறக்காதீர்கள். இதனுடன், தொலைபேசியை தலையணையின் அருகே தவறுதலாக கூட வைக்க வேண்டாம். தலையணைக்கு அருகில் போனை வைத்து தூங்குவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
1. மன அழுத்தம் அதிகரிக்கும்
உங்கள் தலையணைக்கு அருகில் உங்கள் தொலைபேசியை வைத்து தூங்குவது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். இதனுடன் காலையில் தலைவலியும் வரலாம். மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு உங்கள் மூளையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் முதல் வெயிட் லாஸ் வரை... தினமும் ஆளிவிதைகளை டயட்டில் சேருங்க..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ