சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை நாள் அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அட்சயம் என்பதற்கு வளருதல் என்று பொருள். சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை நாள் அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை அன்று பொன், பொருள், பூமி, ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றில் ஒன்றை நல்ல நேரம் பார்த்து வாங்கினால், அது மென்மேலும் அபிவிருத்தியாகும் என்பது நம்பிக்கை.


அட்சய திருதியை வந்துவிட்டால் ஏதாவது ஒரு மங்களப் பொருளை வாங்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த நாளில் தங்கம் வாங்கினால் சேரும் என்று நம்பிக்கையாக பரவிவிட்டது. அட்சய திருதியை பற்றி பல புராணக் கதைகள் உள்ளன.


ஆலயங்களில் ஏலம் போடும் பொழுது, அதிக விலை கொடுத்து உப்பு வாங்குவார்கள். உப்பு வாங்கினால் பணம் சேரும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் அட்சய திருதியை நாளில் பொன், பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் மட்டுமன்றி உப்பு, தானியங்கள், மளிகைச் சாமான்கள், சோறு வடிக்கும் பாத்திரம், மஞ்சள் ஆடை, தெய்வப் படங்கள், சங்கு, சீர்வரிசை சாமான்கள், பூஜை அறையில் உபயோகப்படுத்தும் பொருட்கள், அகல்விளக்கு, வெண்கல மணி, லட்சுமி படம், அடுப்பு, பணப்பெட்டி, மணிபர்ஸ், சர்க்கரை வெல்லம், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வசதிக்கேற்ப வாங்கி வைக்கலாம்.