அமானுஷ்யங்கள் நிறைந்த 6 இந்திய சுற்றுலா தளங்கள்...
சினிமா தியேட்டரில் தனியாக அமர்ந்து ஒரு திகில் படம் பார்க்க வேண்டிய அந்த சவாலைப் பற்றி நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா?... இல்லை என்று எவறும் கூற இயலாது, ஏதேனும் ஒரு தருணத்தில் நீங்கள் அனைவரும் அவ்வாறு சிந்தித்திருப்பீர்...
சினிமா தியேட்டரில் தனியாக அமர்ந்து ஒரு திகில் படம் பார்க்க வேண்டிய அந்த சவாலைப் பற்றி நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா?... இல்லை என்று எவறும் கூற இயலாது, ஏதேனும் ஒரு தருணத்தில் நீங்கள் அனைவரும் அவ்வாறு சிந்தித்திருப்பீர்...
சினிமாவில் வரும் பேய்-க்கு இவ்வளவு பயன் என்றால், அந்த பேய் தொடர்பான இடங்களை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும். இந்தியாவில் பல இடங்கள் பேய் இருப்பதாக கருதப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த குறிப்பிட இடத்திற்கு நீங்கள் ஒருவேளை செல்ல விரும்பினால்., கீழ்வரும் பதிவினை கவனமாக படிக்கவும்.
ராஜஸ்தானின் பங்கர் கோட்டை: ‘இது ஒரு மேஜிக் கதை’
உங்களில் பெரும்பாலோர் இதற்கு முன்பு இந்த கோட்டையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இது இந்தியாவின் மிகவும் பிரபலமான பேய் நகரங்களில் ஒன்றாகும். இது ஆல்வார் மாவட்டத்தில் சரிஸ்கா புலி ரிசர்வ் எல்லையில் அமைந்துள்ளது. அதற்கு ஒரு வரலாறு உண்டு.
இளவரசி ரத்னாவதியை ஒரு மந்திரவாதி காதலித்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அந்த மந்திரவாதி இளவரசியை தனது சூனியத்தால் ஏமாற்ற முயன்றார் எனவும், மந்திரவாதியின் மந்திரத்தில் இருந்து தப்பிக்க இளவரசி மந்திரத்தை மந்திரவாதிக்கே திருப்பியதாகவும் கூறப்படுகிறது. எனினும் மந்திரவாதி தனது இறப்புக்கு முன், அரண்மனையின் மீது ஒரு இருண்ட மந்திரத்தை எழுதினார், அது அந்த அரண்மனையின் அழிவை ஏற்படுத்தியது எனவும் கூறப்படுகிறது. எனினும் இவை அனைத்தும் உள்ளூர் வாசிகள் கூறும் கதைகளே,.. அதிகார்ப்பூர்வ ஆதாரங்கள் ஏதும் இல்லை.
டுமாஸ் கடற்கரை, குஜராத்: ‘இருண்ட மணல் கடற்கரை’
இந்த கடற்கரை கருப்பு மணலுக்கும், அமானுஷ்ய நடவடிக்கைகளுக்கும் பிரபலமானது. இங்கு மக்கள் விசித்திரமான விஷயங்கள் பலவற்றை அனுபவித்திருக்கிறார்கள் மற்றும் பலர் இந்த பேய் இடத்திற்கு சென்ற பிறகு காணாமல் போயுள்ளனர் என கதைகள் கூறப்படுகிறது. முன்னதாக இந்த இடம் இந்து தகன களமாக பயன்படுத்தப்பட்டது எனவும், மக்கள் பலர் இந்த இடத்தில் அமானுஷ்ய குரல்களைக் கேட்டதாகவும், இயற்கைக்கு மாறான சில செயல்களைக் கண்டதாகவும் கூறுகிறார்கள்.
முசோரியில் உள்ள சவோய் ஹோட்டல்:
இந்த ஹோட்டல் இந்தியாவில் மிகவும் பேய் பிடித்த ஹோட்டல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அறியப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவரான அகதா கிறிஸ்டி, இந்த ஹோட்டலில் நடந்த அமானுஷ்ய மனிதர்கள் மற்றும் அமானுஷ்ய சம்பவங்கள் குறித்து 'The Mysterious Affair at styles' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். மேலும் எல்லாவற்றிற்கும் ஒரு கடந்த காலம் இணைக்கப்பட்டுள்ளது என்று அது கூறுகிறது.
இந்த ஹோட்டலில், கார்னட் ஓர்ம் என்ற பெண்மணி தனது மருந்து பாட்டில் ஸ்ட்ரைக்னைனை சேர்த்து கொலை செய்யப்பட்டார் எனவும், பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் இதேபோன்ற சூழ்நிலையில் இறந்து கிடந்தார் எனவும் கூறப்படுகிறது. இந்த மரணம் ஏற்படுத்திய சலசலப்பில் இருந்து இன்றும் மக்கள் வெளிவரவில்லை.
GP பிளாக், மீரட்: ‘பூட்ஸ் உடன் பூஸ்’
மீரட்டில் உள்ள GP தொகுதிக்கு வெளியே உள்ளூர்வாசிகள் ஆவிகள் கண்டதாகவும், சிவப்பு ஆடைகளை அணிந்த பெண்கள் மற்றும் ஆண்கள் மது அருந்துவதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனைய யாராவது சரிபார்க்க அருகில் செல்ல முயற்சிக்கும்போதெல்லாம், இந்த பயமுறுத்தும் நபர்கள் மறைந்து விடுகிறார்கள் எனவும் கூறப்படுகிறது. இன்னும் தீர்க்கப்படாத இந்த மர்மம் இப்பகுதி மக்களை தொடர்ந்து அதிர்ச்சியில் வாழ வைக்கிறது.
சுரங்கப்பாதை எண் 33, சிம்லா-கல்கா ரயில் பாதை;
சிம்லா அதன் அழகுக்காக உலகம் அறியப்படும் ஒரு இடம். மகிழ்ச்சியான இடங்களில் ஒன்றாக பார்க்கபடும் இந்த இடம் யாரையாவது பயமுறுத்துமா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அந்த கேள்விக்கான பதில் ஆம் என்பது மட்டுமே... சிம்லா-கல்கா ரயில் பாதை, பயங்கரமான சுரங்கப்பாதையாக கருதப்படுகிறது.
ஹைதராபாத்தில் ரவீந்திர நகர்: ‘கைவிடப்பட்ட நகர்’
2012-ஆம் ஆண்டில் தொடர்ச்சியான தற்கொலைகள் நடந்தபின்னர் ஹைதராபாத்தில் உள்ள இந்த இடம் பல குடும்பங்களால் கைவிடப்பட்டுள்ளது. இங்கிருந்த தேவியின் கோயில் இடிக்கப்பட்டதால் இந்த அசம்பாவிதங்கள் நடந்திருப்பதாகவும், இவ்வாறான பிரச்சனைகள் இன்றும் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் பல இடங்கள் இவ்வாறான அமானுஷ்ய வரலாறுகளை கொண்டு இந்தியாவில் உள்ளன. இந்த இடங்களை நேரில் கண்டு ரசிக்க சிலர் விரும்புகின்றனர், பலர் அஞ்சுகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை.