ஹாலிவுட் படத்தில் நடிக்க மறுத்த ஸ்ரீதேவி!
தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்!
தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்!
துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஸ்ரீதேவி, திடீரென உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் இவரது உடல் துபாயில் இருந்து மும்பை கொண்டுவரப்படுகிறது. மும்பையில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செய்யப்படுகிறது. இந்நிகழ்வில் இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துக்கொள்ள உள்ளனர். நடிகை ஸ்ரீ தேவியின் மரணம் சினிமா உலகத்தையே சஞ்சலத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்த இவருக்கு ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ஹாலிவுட் படமான, ஜுராஸிக் பார்க் (1993) படத்தில் சிறு வேடத்தில் நடிக்கக் கேட்டார்கள். அப்போது ஹிந்தி படங்களில் அதிக அளவில் கவனம் செலுத்தி வந்ததால் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ஹாலிவுட் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.