ஸ்ரீசைலம் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புனித நகரம். ஸ்ரீசைலம் அமைந்துள்ள மல்லிகார்ஜுன கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்று.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்குள்ள மல்லிகார்ஜுனருக்கு (Mallikarjuna Jyotirlinga) நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம். சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் (Srisailam) இரண்டாம் இடம் வகிக்கிறது.




பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் (Jyotirlinga) ஒன்றான ஸ்ரீமல்லிகார்ஜுன சுவாமியும், பதினெட்டு சக்தி பீடங்களில் குடிகொண்டுள்ள சக்திகளில் ஒன்றான ஸ்ரீபிரம்மராம்பா தேவியும் கோயில் கொண்ட தலம் ஸ்ரீசைலம். இந்த கோவிலின் முக்கிய ஜோதிலிங்க சக்தி தேவியின் வளாகத்தில் அமைந்துள்ளது. வேறு பல போன்ற லிங்கம் - சூர்யா லிங்கம், சந்திர லிங்கம், ஆகாஷ் லிங்கம், ஜல் லிங்கம், பிருத்வி லிங்கம், அக்னி லிங்கம் முதலியன.


ALSO READ | நித்யானந்தாவின் அடுத்த அதிரடி, கைலாசாவில் 3 நாட்கள்: விசா, உணவு, இருப்பிடம் all free


ஸ்ரீசைலம் மகாபாரதத்திலும் (Mahabharata), புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கந்த புராணத்தில் சிறீசைல காண்டம் என்னும் அத்தியாயம் ஒன்று உண்டு. இக் கோயில் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியதற்குச் சான்றாக அமைகின்றது.  ஆதிசங்கரர் இங்கு வந்ததாகவும் இங்கேயே தனது சிவானந்த லகரி என்னும் சமஸ்கிருத நூலை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது. 




இந்த கோவிலில் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற சுவாமிக்கும் அம்மனும் திருமணம் செய்து வைக்கிறார்கள். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.


ALSO READ | 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்று- ஸ்ரீசைலம்