கேரளாவில் உள்ள புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் திருநடை மண்டல விளக்கு பூஜைக்காக 15-ஆம் தேதி திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து எராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். 


இதை தொடர்ந்து, ஐயப்பன் பக்தர்கள் மீது ஐஎஸ் பயங்கரவாதிகளால் ஏற்படலாம் என்று புலனாய்வு கிடைத்துள்ளது. எனவே, பாதுகாப்பை பலப்படுத்தும்படி கேரளா அரசுக்கு புலனாய்வு தகவல் அனுப்பியுள்ளது. இதை தொடர்ந்து சபரிமலையில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.