உதயமாகிறார் குரு பகவான்: இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், மகிழ்ச்சி பொங்கும்
Jupiter Rise: கும்ப ராசியில் வியாழன் உதயமாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வேத ஜோதிடத்தின் படி, ஒன்பது கிரகங்களில் தேவகுரு வியாழன் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் சுப ஸ்தானத்தில் இருந்தால், அவர்களது திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெறுவார்கள். வியாழன் கிரகத்தின் அமைப்பு மற்றும் ராசி மாற்றங்களின் விளைவு 12 ராசிகளையும் பாதிக்கிறது.
குரு பகவான் பிப்ரவரி 24 அன்று அஸ்தமனமானார். மார்ச் 26 , அதாவது நாளை அவர் மீண்டும் உதயமாகிறார். வியாழன் கிரகத்தின் உதயம் மாலை 06.38 மணிக்கு நிகழும். வேத ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் அஸ்தமனமானால், அதன் பலன் குறையத் தொடங்குகிறது. வியாழன் கிரகத்தின் அஸ்தமனம் 12 ராசிகளையும் பாதிக்கிறது. ஒரு கிரகம் உதயமாகும் போது, மக்களின் தலைவிதி மாறத் தொடங்குகிறது. கும்ப ராசியில் வியாழன் உதயமாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதன் அதிகப்படியான தாக்கம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்:
கும்ப ராசியில் வியாழனின் உதயம் மேஷ ராசிக்காரர்களின் பதினொன்றாம் ஸ்தானத்தில் நடக்கிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு வியாழனின் உதயம் சுபமாக இருக்கும். இந்த காலத்தில், உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகம் செய்பவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பண வரவுகள் இருக்கும். இந்த நேரம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் சாதகமாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு வியாழன் கிரகம் எட்டாவது மற்றும் பதினொன்றாவது ஸ்தானத்தின் அதிபதியக உள்ளது. தொழில் ரீதியாக இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் திடீர் பண ஆதாயங்கள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் புதிய வேலைகளைத் தொடங்குவது சாதகமாக இருக்கும்.
மேலும் படிக்க | ஏப்ரலில் கிரகங்களின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பவர் குரு பகவான். குரு உங்கள் ஏழாவது வீட்டில் உதயமாகிறார். சிம்ம ராசிக்கார்ரகள் தொழிலில் நல்ல பலன்களைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் நல்ல லாபம் பெறலாம். குடும்ப உறவினகளின் ஆதரவு உங்களுக்கு இந்த காலத்தில் அதிகமாக கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு கும்பத்தில் வியாழன் உதயம் ஐந்தாம் வீட்டில் நடக்கிறது. ஐந்தாவது வீடு தொழில் மற்றும் கல்விக்கான இடமாகும். குருவின் உதயம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மக்களுக்கு இந்த காலம் வரப்பிரசாதமாக அமையும். வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் சாதகமான சூழல் இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் உதயம் உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் வீட்டில் நடக்கப்போகிறது. இந்த காலத்தில் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். லாபம் காண பல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR