மேஷம்: மறைமுகமாக இருக்கக்கூடிய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களின் வகையில் நன்மைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். எதையும் செய்து முடிக்கக்கூடிய தன்னம்பிக்கை மனதில் அதிகரிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷபம்: இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். பலவிதமான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தாமதங்கள் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த அலைச்சல்கள் உண்டாகும்.


மேலும் படிக்க | Admirable Zodiac: கவர்ச்சியான ராசிகள்! எதிரில் இருப்பவர்களை வசீகரிக்கும் ராசி உங்களுடையதா?


மிதுனம்: மிதுன ராசிக்காரர்  குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறிகள் அகலும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்கு தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.


கடகம்: கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். மாற்றமான சிந்தனைகளின் மூலம் புதுவிதமான அனுபவங்களும், சூழ்நிலைகளும் உண்டாகும்.


Also Read | தேடி வந்திருக்கும் ஆடி வெள்ளியில் அன்னையை வழிபடுவதால் என்ன நன்மை? இதோ..


சிம்மம்: செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் லாபம் அடைவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு மற்றும் நம்பிக்கையை பெறுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மைக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.


கன்னி: மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். பெற்றோரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கமிஷன் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்களின் மூலம் புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவார்கள்.


துலாம்: கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். முயற்சிகளில் இருந்தவந்த மறைமுக தடைகள் விலகும். விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்பட்டு விலகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவிகள் சாதகமாக அமையும்.


விருச்சிகம்: நண்பர்களுக்கிடையே தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் அலைச்சல்களும், பொறுப்புகளும் அதிகரிக்கும்.


தனுசு: தேவையற்ற சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதங்கள் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நண்பர்களின் வழியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.


மகரம்: விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆசைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த சாதகமற்ற சூழல்கள் படிப்படியாக குறையும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் நிதானம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.


கும்பம்: விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து செயல்படுவீர்கள். 


மீனம்: உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.


ALSO READ | கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR