நடிகை சன்னி லியோன் மற்றும் மியா கலீஃபா ஆகியோரின் பெயரில் டெல்லி ரெஸ்டாரண்ட்டில் புதிய வகை உணவுகள் அறிமுகமாகியுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட்டின் "பேபி டால்" என அழைக்கப்படுபவர் சன்னி லியோன். அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர்.


இந்தியா-கனடா அழகியான சன்னி லியோனின், தனது கணவர் டேனியல் வெபரை திருமணம் செய்துக்கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். அழகிய குடும்பத்திற்கு அடையாளமாக கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம், மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட லாத்தூரில் இருந்து நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இதற்கிடையில் இத்தம்பதியருக்கு கடந்த மார்ச் மாதம் இரட்டை குழந்தை பிறந்து குடும்பத்தின் மகிழ்சியினை மேலும் கூட்டியுள்ளது.


இந்நிலையில், பிரபலங்களின் பெயர்களில் கடைகள், போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்குவது என்றிருந்த ரசிகர்கள் தற்போது அடுத்த நிலைக்குச் சென்று புதிதாக சன்னி லியோன் சாப்ஸ் என்ற ஒரு புதிய வகை உணவை அறிமுகப்படுத்தி உள்ளனர்.


டெல்லியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் சைவ உணவுகளுக்கு அசைவ உணவுகளின் பெயர்களை வைத்து வியாபாரத்தை பரபரப்பாக்கிய உணவகம் ஒன்று தற்போது புதிய வியாபார உத்தியை கையில் எடுத்துள்ளது.


சமூக வலைதளங்களில் பிரபலமாகி வந்த ஒரு உணவகத்தின் மெனு கார்டு இந்த உணவகத்துக்குப் பெரும் விளம்பரத்தைத் தேடித் தந்துள்ளது. அதாவது, அந்த மெனு கார்டில் சன்னி லியோன் சாப்ஸ் என்றதொரு உணவு இடம்பெற்றுள்ளது. இதுமட்டுமல்லாமல் மியா கலீஃபா சாப்ஸ், பாபி டோல் சாப்ஸ் என்று கூடுதல் ஐட்டங்கள் வேறு வரிசைக் கட்டி நிற்கிறதாம்