Supreme Court: பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான பெண்ணின் சட்ட உரிமைகள் பற்றி சொல்லப்பட வேண்டும்
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கர்ப்பமான பெண்ணிடம், அவரது சட்ட உரிமைகள் பற்றி சொல்லப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கர்ப்பமான பெண்ணிடம், அவரது சட்ட உரிமைகள் பற்றி சொல்லப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய கருக்கலைப்புச் சட்டம் 1971 (Medical Termination of Pregnancy Act 1971) இன் பிரிவு 3இன் படி, 20 வாரங்களுக்கு அதிகமான கருவை கலைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கர்ப்பமான பெண்ணிடம், அவரது சட்ட உரிமைகள் பற்றி சொல்லப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையில் இந்த அறிவுறுத்தலை வழங்கிய உச்ச நீதிமன்றம், விதிவிலக்கான வழக்குகளில் 20 வாரங்களுக்கு அதிகமான கருவை கலைப்பதற்கு அனுமதி கோருவது தொடர்பான வழக்குகளை விசாரிக்க மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் மருத்துவ வாரியங்களை அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
Also Read | 2 நாள் Bank Strike: எஸ்பிஐ வங்கி கிளை மற்றும் ATM சேவைகள் பாதிக்கப்படலாம்
"ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாக இருந்தால், அவருடைய சட்ட உரிமைகள் குறித்து அவருக்கு தெளிவாக கூறப்பட வேண்டும்" என்று தலைமை நீதிபதி எஸ் ஏ போப்டே தலைமையிலான நீதிமன்ற அமர்வு கூறியது. இந்திய கருத்தடை சட்டம் 1971 இன் பிரிவு 3 20 வாரங்களுக்குப் பிறகு கர்ப்பத்தை கலைப்பதை தடைசெய்கிறது.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 14 வயது சிறுமியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.கே. பிஜு, மருத்துவ காரணங்களில் அடிப்படையில் தனது கட்சிக்காரருக்கு கருக்கலைப்பு செய்வது குறித்து கோரிக்கை வைக்கவில்லை என்றார்.
14 வயது பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டஅந்த சிறுமி 26 வார கர்ப்பத்தை சுமந்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற வழக்குகளில் காலதாமதமாய் கிடைக்கும் தீர்ப்பால் எந்தவித பயனும் இல்லாமல் போய்விடுகிறது. எனவே, அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் மருத்துவ வாரியங்களை அமைப்பது தொடர்பான பிரச்சனையை நீதிபதி ஏ.எஸ். போபண்ணா தலைமையிலான நீதிமன்ற அமர்வு எடுத்துக் கொண்டது.
பாலியல் வல்லுறவு காரணமாக கருவுற்றப் பெண்களின் உரிமைகளுக்கும், இயல்பாக கருவுற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை கவனிக்க வேண்டும். இந்த விவகாரம் நீண்ட நாளாக பலரால் முன்னெடுக்கப்பட்டு, பேசு பொருளாக மாறியுள்ளது. நான்கு வாரங்களில் மத்திய அரசு இந்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டவரின் கருவை கலைப்பதற்கான அனுமதியைத் தவிர, நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணி பெண்களின் தேவையற்ற கருவை (20 வாரங்களைத் தாண்டிய கரு) கலைப்பது தொடர்பான வழக்குகளை ஆராய்வதற்கு தேவையான மருத்துவ வாரியங்களை நியமிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.
"நான் இந்த மனுவை ஆராய்ந்த போது, பாதிப்பக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரின் வலியைக் கண்கூடாக பார்த்தேன்" என்று விசாரணையின் போது நீதிபதி பிஜு வேதனையை பதிவு செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட 26 வார கருவை சுமந்துக் கொண்டிருக்கும் சிறுமி இப்போது கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரவில்லை என்றும் கூறினார். ஆனால் மாநிலங்களில் மருத்துவ வாரியங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டியது தான் என்று நீதிபதி தெரிவித்தார்.
Also Read | இந்தியாவின் உள்விவகாரத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் எப்படி விசாரிக்கலாம்? இந்தியா காட்டம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR