ஓரின சேர்க்கை குற்றமில்லை.. சட்டப்பிரிவு 377 ஐ நீக்கியது உச்ச நீதிமன்றம்
ஓரின சேர்க்கை தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இன்று ஓரின சேர்க்கை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் கூறியதாவது, இந்த சமூகத்தில் ஓரின சேர்க்கையாளர்களுக்கும் சம உரிமை உண்டு. எனவே ஓரின சேர்க்கை எதிரான சட்டப்பிரிவு 377 ஐ நீக்கப்படுகிறது எனக் கூறி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இந்தியாவில் ஓரின சேர்க்கை என்பது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டது. இதனால் ஓரின சேர்க்கை எதிராக சட்டப்பிரிவு 377 உருவாக்கப்பட்டது. இந்த சட்ட பிரிவு படி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஓரின சேர்க்கை அனுமதிக்க வேண்டும் எனவும், பாலியல் உறவு என்பது தனிப்பட்ட மனிதனின் உரிமை. எனவே ஓரின சேர்க்கை எதிரான சட்டப்பிரிவு 377-ஐ நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இந்த சட்டப்பிரிவு நீக்கக்கோரி பல்வேறு அமைப்புகளின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.
ஓரின சேர்க்கை ஒரு தரப்பு ஆதரவு தெரிவித்தாலும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கு மீதான அனைத்து வாதங்களும் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு சம்பந்தமான இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்க இருக்கிறது.