பிரபல இந்திய நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி-ன் மார்பகம் குறித்து இன்ஸ்டாகிராமில் கேலி செய்த நபர்களுக்கு, தனது ட்விட்டர் பதிவின் மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல இந்திய நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்திற்கு பலர் நேர்மறையான விமர்சனங்களை முன் வைத்திருந்தாலும், சிலர் எதிர்மறை கருத்துகளையும் தெரிவித்துள்ளனர்.


குறிப்பாக சிலர் ஸ்வஸ்திகா முகர்ஜி-யின் உடல் பாகத்தினையும் கிண்டல் செய்து பதிவிட்டுள்ளனர். "உங்களுடைய மார்பகம் தளர்ந்து காணப்படுகிறது, உங்கள் உடலுக்கு இந்த ஆடை பொறுந்தவில்லை" என ஒரு நபர் நேரடியாக விமர்சித்துள்ளார்.




இந்த பதிவுகளை பார்த்து பொறுமை காத்த ஸ்வஸ்திகா முகர்ஜி தற்போது தனது உடல் பாகங்களை கிண்டல் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.



இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... "தளர்வான மார்பங்கள் பெண்களுக்கு இயல்பான ஒன்று என்பதை புரிந்துக்கொள்ளாத காம இச்சை கொண்ட ஆண்களுக்கு நான் சொல்லிக் கொள்வது "நான் பெருமையான தாய்" என்பது தான். என் மார்பகத்தை பார்த்து கிண்டல் செய்யும் ஆண்களே, உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தாய்பால் கொடுத்தால் தான் இதுபற்றி புரிந்துக்கொள்வீர்கள்" என பதிவிட்டுள்ளார்.



இதற்கிடையில் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் ஸ்வஸ்திகா முகர்ஜி-யின் இந்த அதிரடி பதில்களை இணையத்தில் உலா வரும் பெண்கள் மேற்கொள்காட்டி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.