திரைப்பட இயக்குநர் சுசிகணேசன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக லீனா மணிமேகலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த லீனை மணிமேகலை, இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கும் இயக்குனர் சுசி கணேசனால் பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டது. அதுகுறித்து கூறினால், நான் பொய்சொல்வதாக கூறும் சுசி கணேசன், உண்மையை மறைக்க பொய் மேல் பொய்களை சொல்லி வருகிறார். பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் போது, அவர்களுக்கு பலர் ஆதரவு தருவதில்லை. மூத்த நடிகர்களான ரஜினி, கமல் போன்றவர்கள் மெளனம் காப்பது குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக அமைகிறது என்று கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து திரைப்பட இயக்குநர் சுசி கணேசன், லீனா மணிமேகலை விளம்பரத்திற்காக என் மீது தவறான புகார் அளித்துள்ளார். லீனா மணிமேகலை கூறிய புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறினார். மேலும் லீனா மணிமேகலைக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.


இந்நிலையில், இன்று லீனா மணிமேகலை தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் திரைத்துறையினரை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார். அதில், "தமிழில் கதை கவிதை எல்லாம் எழுதிட்டிருக்கிற படைப்பாளிகள், பட இயக்குநர்கள், கருத்தாளர்கள் எல்லாம் #metoo இயக்கம் வந்தபிறகு செத்து கித்து போயிட்டீங்களா? இல்ல ஓடி ஒளிஞ்சிருக்கீங்களா? உங்க மெளனத்தை பயம் என எடுத்துக்கொள்ளலாமா?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.


 



இதற்கு தமிழில் திரைத்துறையினரை பதில் அளிப்பார்களா? என்பது வரும் நாட்களில் தெரியவரும்.