Rasipalan: இன்றைய ராசிபலன் 2021 செப்டம்பர் 13, ஆவணி 28ம் நாள், திங்கட்கிழமை
சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்
புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.
இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே...
ராசிபலன் - 13-09-2021
மேஷம்: இளைய உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். கடன் சார்ந்த பிரச்சனைகளின் மூலம் மனவருத்தங்கள் நேரிடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும்போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். சந்தேக உணர்வுகளினால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
ரிஷபம்: குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகளும், தொழில் சார்ந்த உதவிகளும் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். உடல் உபாதைகள் தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
மிதுனம்: மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
கடகம்: பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் சாதகமாக நிறைவுபெறும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும்.
சிம்மம்: மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். தாயாரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பேச்சுக்களில் பொறுமையை கையாள வேண்டும். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் மேம்படும்.
Also Read | இன்றைய பஞ்சாங்கம்: 2021 செப்டம்பர் 12, ஆவணி 28ம் நாள், திங்கட்கிழமை
கன்னி: வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
துலாம்: மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வாழ்க்கைத்துணைவருடன் குறுகிய தூரப் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த வாக்குவாதங்கள் குறைந்து ஒற்றுமை ஏற்படும்.
விருச்சிகம்: இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வர்த்தக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும்.
தனுசு: மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு ஏற்படும். உத்தியோகத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். போட்டித்தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
மகரம்: விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்க இயலும். சுபகாரியங்களில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும்.
கும்பம்: குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். காப்பீடு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் மற்றும் ஆசைகள் பிறக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். நுணுக்கமான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள்.
மீனம்: விவசாயப் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனம் விரும்பிய நெருக்கமானவர்களுடன் பொழுதுகளை கழிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
Also Read | கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR