ஆடிப்பூரம் பல்வேறு சிறப்புகளை உடையது. அம்பாளின் அனுக்கிரகம் மிகுந்த நாள்களில் ஆடிப்பூரம் மிகவும் முக்கியமானது. ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் வரும் பூர நட்சத்திரம் மிகவும் சிறப்பானது. காரணம் பூர நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். எனவே, சுக்கிரனுக்கு உகந்த தினமான வெள்ளிக்கிழமையில் வரும் ஆடிப்பூரம் மிகவும் தவறவிடக் கூடாதது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆடிப்பூர விரதம்
ஆடிப்பூரத்தன்று காலையிலேயே எழுந்து நீராடி தூய உடை அணிந்து விரதம் இருந்து அம்பாளுக்கு உகந்த பால்பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். கொரோனா தொற்று காரணத்தால் ஆலயம் செல்ல முடியாததால் வீட்டிலேயே அம்பாள் படத்துக்கு மலர்கள் சாத்தி வழிபடலாம். அம்பாளுக்கு பாராயணம் செய்து நெய் விளக்கேற்றி வழிபடலாம். இந்த தினத்தில் புதிய வளையல்களை எடுத்துப் பூஜை அறையில் வைத்துப் பின் யாரேனும் சுமங்கலிகளுக்கும் கன்னிப் பெண்களுக்கும் வழங்குவதன் மூலம் வீட்டில் இருக்கும் வறுமைகள் நீங்கும் என்பது ஐதீகம். 


 


ALSO READ | இன்று ஆடிப்பூரம் 2020....மிக சிறப்பான பலன்கள் பெறும் ராசிகள் இதோ! ...


 



 


ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்
ஆடிபூரம் மஹாலக்ஷ்மி அம்சமான ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினம். ஆண்டாள் தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாக கருதப்படுகிறார்.


 


ALSO READ | கோயில்களுக்காக பிரத்யேக தொலைக்காட்சி சேனலைத் தொடங்கும் தமிழக அரசு


 



ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் வழிபாடு செய்வது மிகவும் அவசியம். குறிப்பாகத் திருமண வரம் வேண்டுபவர்கள் கட்டாயம் அன்னை அருளிய திருப்பாவைப் பாடல்களை ஆடிப்பூர நாளின் காலையில் எழுந்து பாராயணம் செய்ய வேண்டியது அவசியம். ஆடிப்பூர தினம் என்றில்லை, நாளுமே திருப்பாவைப் பாடல்களைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.