கொரியர்கள் எப்பொழுதும் இளமையான ஆற்றலையும் கொண்டிருப்பது எப்படி என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. வெறுமனே அவர்களின் மரபியல் என்று கடந்து போகவேண்டாம். கொரியர்கள் நீண்ட மற்றும் துடிப்பான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். ஒவ்வொரு நாளும் முழு ஆரோக்கிய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தோல் பராமரிப்பு: கொரியர்கள் தினம்தோறும் தோல் சடங்குகளை பின்பற்றுகிறார்கள். பாம்பரிங் செய்வார்கள். அதாவது தோலை சுத்தப்படுத்துவது, நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்திருக்கவும், வறட்சி அடையாமல் இருக்கவும் காலையிலேயே தோல் பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.


சன் ஸ்கிரீன்: கொரியர்கள் சூரிய ஒளி பாதுகாப்பில் தீவிரமாக கவனம் செலுத்துவார்கள். சுருக்கங்கள் ஏற்படாமல் இருக்க சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தினசரி சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துகிறார்கள்.


மேலும் படிக்க | சருமம் பளபளப்பாகணுமா? உடல் இந்த விஷயங்களை பாலோ பண்ணுங்க


புளித்த உணவுகள்: கிம்ச்சி, யாராவது கேள்விபட்டிருக்கிறீர்களா? கொரிய உணவு வகைகளில் கிம்ச்சி மற்றும் கோச்சுஜாங் போன்ற பல புளிக்கவைக்கப்பட்ட உணவுகள் உள்ளன, அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் இளமைப் பொலிவுக்கு பங்களிக்கும் புரோபயாடிக்குகளால் நிரம்பியுள்ளன.


அதிகமாக தண்ணீர் குடித்தல் : நச்சுகளை வெளியேற்றவும், சருமத்தை பொலிவாக வைத்திருக்கவும் தண்ணீர் அவசியம். கொரியர்கள் நாள் முழுவதும் நீரேற்றமாக இருக்க அதிகமாக தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பார்கள். அதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.


நல்ல தூக்கம் முக்கியமானது: எல்லோரையும் போலவே, கொரியர்களும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஒரு பொலிவான நிறத்திற்கும் ஒரு நல்ல இரவு தூக்கத்தின் முக்கியத்துவத்தை அறிவார்கள். சரியான நேரத்துக்கு தூங்க சென்றுவிடுவார்கள்.


வியர்வை: வழக்கமான உடற்பயிற்சி கொரிய ஆரோக்கியத்தின் ஒரு மூலம். விறுவிறுப்பான நடைப்பயிற்சி முதல் கே-பாப் நடன பயிற்சிகள் வரை  கொரியர்கள் தினமும் செய்துவிடுவார்கள். இது அவர்களை சுறுசுறுப்பாக இருக்க வைக்கிறது.


ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுதல்: எப்போதும் மன அழுத்தம் இல்லாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். அதாவது தினமும் தியானம் செய்வதுடன் இயற்கையோடு நேரத்தை செலவிடுவார்கள். இதுபோன்ற பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்கிறார்கள்.


சமூக இணைப்பு: கொரியர்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வலுவான சமூக பிணைப்புகளுக்கு மதிப்பு கொடுக்கிறார்கள். இந்த கூட்டு குடும்ப பிணைப்பு அவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் கொடுக்கிறது.


சாப்பிடுதல்: கொரியர்கள் தங்கள் உணவை ருசித்து, கவனத்துடன் சாப்பிடுகிறார்கள், இது சிறந்த செரிமானம் மற்றும் ஆரோக்கியமான எடைக்கு வழிவகுக்கும்.


பாரம்பரிய மருத்துவம்: பல கொரியர்கள் மூலிகை வைத்தியம் அல்லது அக்குபிரஷர் போன்ற பாரம்பரிய கொரிய மருத்துவ முறைகளை தங்கள் ஆரோக்கிய நடைமுறைகளில் இணைத்துக் கொள்கின்றனர்.


இந்த கொரிய பழக்கவழக்கங்களை உங்கள் வாழ்க்கைமுறையில் இணைத்துக்கொள்வது இளமை மற்றும் ஆற்றல்மிக்க தோற்றத்தை அடைய உதவும். நிலைத்தன்மை முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இந்த பழக்கங்களை பின்பற்றுவது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நீண்டகால நன்மைகளுக்கு வழிவகுக்கும்.


மேலும் படிக்க | தொப்பையை குறைந்து, சிம்ரன் போல் இடுப்பு வேண்டுமா? தண்ணீரில் இதை கலந்து குடிங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ