இணையத்தில் வைரலாகும் புகைப்படங்களை தேர்ந்தெடுத்து, அதிலிருந்து உலகின் வசிகரமான முகம் கொண்ட 100 பெண்கள் பட்டியலை தயாரித்து ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது TC Candler!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1990-ஆம் ஆண்டு முதல் 'உலகின் வசிகரமான முகம் கொண்ட 100 பெண்கள் பட்டியல்' TC Candler மற்றும் இன்டர்ஸ்டன்ட் கிரிட்டிக்ஸ் ஆகியோரால் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகின்றன. முதலில் ஒரு சிறிய திட்டமாக தொடங்கப்பட்ட இந்த பட்டியல், ஆண்டுதோறும் மக்களிடன் கிடைத்த வரவேற்பால் இணைய அங்கிகார நிகழ்வாக வளர்ந்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் மதிப்புமிக்ககூடிய பட்டியலாக இப்பட்டியல் கருதப்படுகிறது.


இந்நிலையில் இந்தாண்டிற்கான பட்டியல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலினை தயாரிக்க சுமார் 3000 பேர் கொண்ட குழு, 90,000-க்கும் மேலான பிரபலங்களின் புகைப்படங்களை தேர்ந்தெடுத்து, இப்பட்டியலினை வெளியிட்டுள்ளனர்.


இந்த பட்டியல் ஆனது, புகைப்படத்தில் இருக்கும் பிரபலங்களின் கவர்ச்சி தன்மை, வசிகரத்தன்மை போன்ற அலகுகளால் தயாரிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட இந்த புகைப்படங்களுக்கு மக்கள் அளிக்கும் வரவேற்ப்பு, ஆதரவு அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.



அந்த வகையில் இந்தாண்டு வெளியான பட்டியலில் பிரன்ச்சு நாட்டு அழகி Thylane Blondeau இப்பட்டியில் முதல் இடம் பிடித்துள்ளார். 17-வயது ஆகும் இந்த இளம் அழகி தனது 4-வது வயது முதல் மாடலிங் துறையில் இருந்து வருகின்றார். துறையில் நுழைந்து 2 ஆண்டுகளே ஆன நிலையில் இவரது 6-வது வயதில் இதே 'உலகின் வசிகரமான முகம் கொண்ட 100 பெண்கள் பட்டியல்' முதல் இடம் பிடித்தார். இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இப்பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார்.



சுமார் 40 நாட்டு பிரபலங்களை கொண்டு பட்டியலிடப்படும் இப்பட்டியலில், இந்திய அழகிகளும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.


இந்தாண்டிற்கான பட்டியலில் தீபிகா படுகோனே 61-வது இடம் பிடித்துள்ளார். இதுவரை 6 முறை 100 பெயர் பட்டியலில் இடம் பிடித்துள்ள தீபிகா படுகோனே, முன்னாதாக கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் 12-வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.



மற்றொரு இந்திய அழகியான பூஜா ஹெட்ஜ் இந்தாண்டிற்கான பட்டியலில் 27-வது இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இவர் முதல்முறையாக இவர் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.