தீபாவளிப் பரிசாக மிக மலிவான Home loan-களை அளிக்கும் 8 வங்கிகளின் பட்டியல் இதோ
வாடிக்கையாளர்களை ஈர்க்க வங்கிகளும் பல தள்ளுபடிகளை வழங்குகின்றன. சில வங்கிகளின் விகிதங்கள் 7 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன.
புதுடெல்லி: கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் வாழ்க்கை மெதுவாக தன் வழக்கமான பாதையில் திரும்பிக்கொண்டிருக்கின்றது. இப்போது அனைவரின் கவனமும் வரவிருக்கும் பண்டிகைகளின் மேல் உள்ளது. இந்த பண்டிகை காலத்தில் (Festival Season) நீங்கள் வீடு அல்லது கார் வாங்க விருப்பம் கொண்டிருந்தால், இது உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பாக அமையலாம். அக்டோபர் 1 முதல், வங்கிகளின் வட்டி விகிதங்கள் வெளிப்புற அளவுகோலுக்கு மாறியுள்ளன. இதனால் கடன்கள் மிகவும் மலிவாகியுள்ளன.
மேலும், வாடிக்கையாளர்களை ஈர்க்க வங்கிகளும் பல தள்ளுபடிகளை வழங்குகின்றன. மிகக் குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன்களை (Home Loan) வழங்கும் 10 வங்கிகளைப் பற்றி இப்போது இங்கே பார்க்கலாம்.
சில வங்கிகளின் விகிதங்கள் 7 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. இது வீட்டுக் கடன்களை வாங்குபவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
1. Union Bank of India
மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்குபவர்களின் பட்டியலில் அரசு வங்கியான Union Bank of India-வும் உள்ளது. இந்த வங்கி 6.70 சதவிகிதத்தில் வீட்டுக் கடனை வழங்குகிறது. இது அதிகபட்சமாக 7.15% வரை செல்லக்கூடும். நீங்கள் இங்கிருந்து கடன் வாங்கினால், மொத்த கடனில் 0.50 சதவீத செயலாக்கக் கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். இருப்பினும், இங்கு செயலாக்கக் கட்டணம் ரூ .15,000 க்கு மேல் இருக்காது.
2. Bank of India
Bank of India, வாடிக்கையாளர்களுக்கு 6.85%-ல் கடன்களை வழங்கி வருகிறது. இந்த வங்கி மொத்த கடன் தொகையில் 0.25% செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கிறது. இது ரூ .1,500 முதல் அதிகபட்சம் ரூ .20,000 வரை இருக்கும். இந்த வங்கியின் அதிகபட்ச வட்டி 7.15% ஆகும்.
3. Central bank of India
Central bank of India-வும் 6.85% வீதத்தில் வீட்டுக் கடனை வழங்குகிறது. செயலாக்கக் கட்டணமாக, மொத்த கடன் தொகையில் 0.50 சதவீதத்தை நீங்கள் செலுத்த வேண்டும். இதன் அதிகபட்ச வரம்பு ரூ .20,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7.30%-ல் வீட்டுக் கடனைப் பெறுவீர்கள்.
4. Canara Bank
Canara Bank, 6.90% வீதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. மொத்த தொகைக்கு 0.50% செயலாக்க கட்டணம் விதிக்கப்படும். இது அதிகபட்சமாக ரூ .10,000 வரை இருக்கலாம். கனரா வங்கியின் அதிகபட்ச வட்டி விகிதம் 8.90% ஆகும்.
ALSO READ: SBI Card வைத்திருப்பவர்களுக்கு Good News: உங்கள் card-ன் பலம் கூடியது!!
5. Punjab & Sind Bank
Punjab & Sind Bank-கும் 6.90 சதவீத வீதத்தில் வீட்டுக் கடனை வழங்குகிறது. இது அதிகபட்சமாக 7.25 சதவீதம் வரை செல்லும். சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த வங்கி செயலாக்க கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணங்களை வசூலிக்கவில்லை. அதாவது இங்கு கடன் வாங்கினால், குறைந்தபட்சம் 10-15 ஆயிரம் ரூபாயை எளிதில் சேமிக்க முடியும்.
6. SBI Term Loan
நாட்டின் மிகப்பெரிய அரசாங்க வங்கி SBI, வாடிக்கையாளர்களுக்கு 6.95%-ல் வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. இது அதிகபட்சமாக 7.45% வரை செல்லக்கூடும். மொத்த தொகையில் 0.40 சதவீதத்தை செயலாக்கக் கட்டணமாக SBI வசூலிக்கிறது. ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த கட்டணம் 10,000 க்கு மேல் செல்லாது.
7. HDFC Bank
நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC வங்கியும் 6.90 சதவீத வீதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. செயலாக்கக் கட்டணங்களைப் பற்றிப் பேசுகையில், கடன் தொகையில் 0.5 சதவீத வீதத்தில் வங்கி இந்த கட்டணத்தை வசூலிக்கிறது. இருப்பினும், இந்த தொகை ரூ .3,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
8. ICICI Bank
ICICI வங்கி 6.95%-ல் வீட்டுக் கடனை வழங்குகிறது. இது அதிகபட்சம் 7.95% வரை செல்லக்கூடும். மொத்த கடன் தொகையில் 0.50% செயலாக்கக் கட்டணத்தை வங்கி வசூலிக்கிறது.
ALSO READ: SBI வழங்கும் விழாக்கால சிறப்பு சலுகைகள்: விவரம் இதோ!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR