ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜாதகத்தின் கிரக தசைகள் மற்றும் ராசியின் அடிப்படையில் நபர்களின் இயல்பும் அதிர்ஷ்டமும் மாறும். ஒவ்வொருவரின் இயல்பும் வித்தியாசமானது. ஒருவரது ராசியின் மூலம் அவரைப் பற்றிய பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், ராசியின் அடிப்படையில் ஒரு நபரின் இயல்பு, எதிர்காலம் மற்றும் ஆளுமையைப் பற்றியும் எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிடத்தில் ஒரு நபரின் காதல் வாழ்க்கையைப் பற்றியும் அறிய முடியும். சிலர் உண்மையான அன்பைத் தேடுகிறார்கள். சிலரோ பல முறை காதலிக்கிறார்கள். அடிக்கடி காதலித்து பிரேக் அப் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நபர்களும் உண்டு. அப்படிப்பட்ட ராசிக்காரர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


ரிஷபம்: இந்த ராசிக்காரர்கள் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். சாதாரண ஈர்ப்பையும் காதல் என தப்பாக நினைத்துக்கொள்வார்கள். ஆகையால் இவர்களது காதல் உறவுகள் உறுதியாக இருப்பதில்லை. எனினும், இவர்கள் ஒருவரை முழுமையாக நேசிக்கத் தொடங்கிவிட்டால், பின்னர் வேறு யாரையும் பார்க்க மாட்டார்கள். ரிஷப ராசிக்கார்ரகள் அன்பில் மிகவும் விசுவாசமானவர்கள், தங்கள் வாழ்க்கைத் துணையை மிகவும் நேசிக்கிறார்கள்.


மேலும் படிக்க | ராசி மாறுகிறார் சூரிய பகவான்: இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட் 


மிதுனம்: ஜோதிட சாஸ்திரப்படி மிதுன ராசிக்காரர்கள் மகிழ்ச்சியாகவும், விளையாட்டாகவும் இருப்பார்கள். இவர்கள் யாருடனும் வேண்டுமானாலும், மிக விரைவாக நட்பு கொள்கிறார்கள், மிக விரைவில் காதலிலும் விழுந்துவிடுகிறார்கள். எனினும், நீண்ட நாட்களுக்கு இவர்கள் மனம் ஒருவரிடம் லயிக்காது. இதனால், இவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காதல் உறவுகள் உருவாகின்றன. இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு, இவர்கள் தங்கள் துணையுடன் நேர்மையாக இருக்கிறார்கள். 


துலாம்: துலா ராசிக்காரர்கள் உறவுகளைப் பேணுவதில் மிகவும் சிறந்தவர்கள். எனினும், சில சமயம்தான் இவர்களது ஆர்வம் ஒரு நபர் மீது இருக்கும். இதனால் இவர்களுடைய உறவுகளும் பலவீனமடையும். 


கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் நீண்ட நாட்களுக்கு ஒருவரோடு இணைந்து இருக்க பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள். இவர்கள் வாழ்நாள் முழுதும் காதலை தேடிக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு திடீரென காதல் மலரும், உடனேயே அந்த காதலில் ஆர்வமும் குறைந்துவிடும். பிரேக் அப் செய்வது அடிக்கடி நடக்கும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.) 


மேலும் படிக்க | கிரக மாற்றம்: அடுத்த 21 நாட்களுக்கு இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம், செல்வம் பெருகும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR