ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான இன்று உலகம் முழுவதும் முட்டாள்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த நாளில் மக்கள் அவர்கள் நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர் என பலரிடமும் ஏதேனும் பொய் சொல்லி ஏமாற்றுவது, குறும்புத்தனம் செய்வது போன்ற பல நகைச்சுவையான விஷயங்களை செய்வார்கள்.  பள்ளிகளில் மாணவர்கள் சக மாணவர்கள் மீது பேனா மையை தெளிப்பது, கேலிசெய்யும் விதமான வார்த்தைகளை காகிதத்தில் எழுதி அதனை மற்றவரின் முதுகில் ஒட்டுவது போன்ற செயலகளில் ஈடுபடுவார்கள்.  இந்த நாள் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கம் சில வேடிக்கையான செயல்களை செய்து மற்றவர்களை முட்டாள் ஆக்குவதே ஆகும்.  இந்த முட்டாள்கள் தினமானது முதன்முதலாக பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் கொண்டாடப்பட்டது, ஆனால் இந்த பழக்கம் நாளடைவில் மற்ற நாடுகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பரவ தொடங்கி தற்போது இந்த நாளை பல நாடுகளும் கொண்டாடி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | வைரல் வீடியோ: சைக்கிளில் சாகசம் செய்யும் பலே இளைஞர்!


நாம் இந்த தினத்தை கொண்டாடி வருகிறோமே தவிர இந்த நாள் உருவானதற்கான பின்னணி குறித்து இதுவரை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  இந்த நாள் எப்படி உருவானது என்பது குறித்து சில அறிஞர்கள் கூறியுள்ளனர், ஜூலியன் நாட்காட்டியில் இருந்து பிரான்ஸ் கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறிய பிறகு, அதாவது 1582 ஆம் ஆண்டில் தான் இந்த நாள் முதன்முதலாக கொண்டாடப்பட்டு இருக்கிறது.  ஜூலியன் நாட்காட்டியில் புத்தாண்டு தினமானது, இந்து நாட்காட்டியைப் போலவே ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கியது.


இந்த ஜூலியன் நாட்காட்டி பூமி, சூரியனைச் சுற்றி முடிக்க எடுத்துக்கொள்ளும் உண்மையான நேரத்தை காண்பிக்கவில்லை, அதனால் ஜூலியன் நாட்காட்டி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாற்றப்பட்டது.  கிரிகோரியன் நாட்காட்டியின்படி புத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி கொண்டாடப்பட்டது.  பல நாடுகளும் ஜூலியன் நாட்காட்டியை ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில், பிரான்ஸ் மற்றும் அந்த நாட்காட்டியை ஆதரித்தது.  இந்த ஜூலியன் நாட்காட்டியை பயன்படுத்துபவர்களை முட்டாள்களாக என்று மற்றவர்கள் அழைத்தனர்.  



பின்னர் இந்த நாள் 18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் முக்கியத்துவம் பெற்றது மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் விமர்சையாக கொண்டாடினர்.  இந்த நாட்களில் பலரும் தங்களது கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருந்தனர், இருப்பினும் இந்த மகிழ்ச்சியான நாளுக்கு எந்த நாடுகளும் பொது விடுமுறை அளிக்காத நிலையில் ஒரு சில நாடுகள் மட்டும் பொது விடுமுறை அளித்து வருகிறது.  சைப்ரஸ் மற்றும் உக்ரைனின் ஒடேசா நகரிலும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு மக்கள் இந்த தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.


மேலும் படிக்க | Bizarre Marriage: 53 வயது குறைவான எம்பியை திருமணம் செய்கிறாரா முன்னாள் பிரதமர்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR