பலருக்கு, ஒரு குழந்தையைப் பார்த்துக்கொள்வதே பெரிய வேலையாக இருக்கிறது. பெற்றோர்களாய் இருப்பது ஒரு கடினமான வேலைதான். இதில் அதிக அளவு அர்ப்பணிப்பும் தியாகமும் தேவைப்படுகின்றது. ஆனால் இங்கு ஒரு பெண்ணிற்கு ஏற்கனவே 10 குழந்தைகள் இருந்தும், இன்னும் குழந்தைகள் வேண்டும் என்ற அசை வந்துவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 10 ஆண்டுகளில், 36 வயதான கர்ட்னி ரோஜர்ஸ் பத்து குழந்தைகளைப் பெற்றார். ஆனால் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை நிறுத்த அவருக்கு மனமில்லை! அவருக்கு இன்னும் இரண்டு குழந்தைகள் வேண்டுமாம்!!


2008 ஆம் ஆண்டில் கோர்ட்னி ரோஜர்ஸ் கிறிஸ் ரோஜர்ஸ் என்பவரை மணந்து கொண்டார். அவர்களுக்கு 2010 இல் முதல் குழந்தை பிறந்தது. அப்போதிருந்து, கர்ட்னி மேலும் 9 முறை கர்ப்பமானார். கடந்த 10 ஆண்டுகளில் அவர் கர்ப்பமாக இல்லாமல் இருந்தது ஒன்பது மாதங்கள் மட்டுமே.


தற்போது, ​​இந்த அமெரிக்க தம்பதியருக்கு (US Couple) ஆறு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர். சுவாரசியமாக இவர்களது குடும்பத்தில் அனைவரது பெயர்களும் ‘C’ என்ற எழுத்தில்தான் துவங்குகிறது. Clint, Clay, Cade, Callie, Cash, இரட்டையர்கள் Colt மற்றும் Case, Calena, Caydue மற்றும் Coralee ஆகியவை இவர்களது பெயர்கள்.


மெட்ரோ யுகே அறிக்கை ஒன்று, அவர் மீண்டும் கர்ப்பமாக உள்ளதாகவும், நவம்பர் 19 ஆம் தேதி தனது 11 வது குழந்தையை எதிர்பார்க்கிறார் என்றும் கூறுகிறது.


ALSO READ: OMG...ஆணி, ஊசி, ஸ்க்ரூடிரைவர்….எங்க? அறுவை சிகிச்சையில் அதிர்ந்த Doctors!!


‘எனக்கு இரண்டு முறை கருச்சிதைவுகள் ஏற்பட்டதால் எனக்கு எப்போதும் பதற்றமாக இருக்கும். ஆனால் இப்போது குழந்தைக்கு 33 வாரங்கள் ஆகிவிட்டதால், மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். குழந்தை பிறக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். 10 குழந்தைகளுடன் வாழ்க்கை ஏற்கனவே மிகவும் பரபரப்பாக உள்ளது.’ என்கிறார் அந்த பெண்.


குடும்பம் செலவுகள் மற்றும் பரப்பான வாழ்க்கை என இதுவரை பல போராட்டங்கள் நிறைந்ததாகத்தான் வாழ்க்கையின் பயணம் இருந்துள்ளது. தடைகள் பல உள்ள போதும், இன்னும் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறர்.


"எங்களுக்கு 12 குழந்தைகள் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். என கணவர் வீட்டில் 10 குழந்தைகள் இருந்தார்கள். அவர்தான் மூத்தவர். நாங்கள் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர், அவர் தாயைப் போலவே நானும் அத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் விளையாட்டாக கூறினார். அது நிஜமாகி விட்டது” என்று அவர் கூறினார்.


ALSO READ: நீ……....ண்ட கால்களுக்கான Guinness World Record-ஐ தட்டிச் சென்ற அமெரிக்க பெண்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR