Bike Maintenance Tips: இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு வழக்கமான சரியான பராமரிப்பு தேவைப்படுகிறது. உங்களிடம் பைக் இருந்தால், அவ்வப்போது அதன் பாகங்களை சரிபார்த்து, சுத்தம் செய்து, சர்வீஸ் செய்வது முக்கியம் ஆகும். பைக்கின் சில பகுதிகள் மிகவும் நுட்பமானவை, அவற்றுக்கு சிறப்பு கவனம் தேவை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்கள் பைக்கின் (Bike) திறன் இந்த பாகங்களை நீங்கள் எவ்வாறு கவனித்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உள்ளது. இந்த பாகங்களை பராமரிப்பதற்கான சில முக்கிய குறிப்புகளை இந்த பதிவில் காணலாம். இவற்றை பின்பற்றினால்,  உங்கள் பைக் பல ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்சினையையும் இல்லாமல் இருக்கும். 


பைக்கின் செயின்


- பைக் செயினை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.
- மென்மையான பிரஷின் உதவியுடன் செயினில் உள்ள மணலை அவ்வப்போது சுத்தம் செய்யவும்.
- செயினை ஒருபோதும் தண்ணீரில் கழுவக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் செயினில் துருப்பிடிக்கலாம்.
- செயினை மிகவும் இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ வைக்காதீர்கள்.
- அவ்வப்போது மெக்கானிக்கிடம் காட்டி செயினை சரிபார்க்கவும்.


ஏர் ஃபில்டர் 


- ஏர் ஃபில்டரை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்.
- குறிப்பிட்ட நேரத்தில் அதை மாற்ற வேண்டும்.


பேட்டரி


- பேட்டரியை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்.
- பேட்டரியில் கசிவு ஏற்பட்டால் உடனடியாக மாற்றவும்.
- பைக் அதிகம் இயங்கவில்லை என்றால், அவ்வப்போது பேட்டரியை சார்ஜ் செய்வது அவசியம் ஆகும்.


டயர் 


- டயர் நிலை மற்றும் காற்றின் அழுத்தத்தை கண்காணிக்கவும்.
- சீரான இடைவெளியில் வீல் பாலன்சிங் செய்யுங்கள்.
- பிடிப்பு இல்லாத டயர்களை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.


ALSO READ: Bike Mileage Tips:உங்கள் பைக்கின் மைலேஜை மேம்படுத்த சூப்பர் டிப்ஸ் இதோ!!


கிளட்ச்


- கிளட்சிக் சரியான அட்ஜெஸ்ட்மெண்ட் (சரியான நிலை) அவசியமாகும்.
- கிளட்சை மிகவும் இறுக்கமாக வைக்க வேண்டாம்.
- பைக்கில் செல்லும் போது கிளட்ச் இலகுவாக இருக்க கிளட்சில் ஃப்ரீ பிளே வையுங்கள். 


எஞ்சின் 


- எஞ்சினை அவ்வப்போது சர்வீஸ் செய்யவும். 
- கார்பரேட்டர் மற்றும் வால்வை அவசியம் சுத்தம் செய்யவும்.
- ஒவ்வொரு 1500 கிலோமீட்டருக்கு பிறகும் கார்பரேட்டரை சுத்தம் செய்ய வேண்டும்.
- ஸ்பார்க் பிளக்கையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
- 4-ஸ்ட்ரோக் பைக்குகளில், ஒவ்வொரு 1500 கிலோமீட்டருக்கு பிறகும் ஸ்பார்க் பிளக்குகளை மாற்ற வேண்டும்.


எஞ்சின் ஆயில் 


- சிறந்த எஞ்சின் ஆயில் எஞ்சினின் செயல்திறனை அதிகரிக்கிறது மற்றும் எஞ்சினின் ஆயுளையும் நீட்டிக்கிறது.
- எப்பொழுதும் நல்ல எஞ்சின் எண்ணெயை உபயோகித்து குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு மாற்றவும்.
- என்ஜின் எண்ணெய் அளவை எப்போதும் சரிபார்க்கவும்.
- எஞ்சின் ஆயில் எங்கிருந்தும் கசியாமல் இருப்பதை அவ்வப்போது உறுதி செய்துகொள்ளவும். 
- அழுக்கான எஞ்சின் எண்ணெயுடன் பைக்கை ஓட்ட வேண்டாம். இதனால் எஞ்சினின் மைலேஜ் (Mileage), ஆயுள் மற்றும் செயல்திறன் பாதிக்கப்படலாம்.


ALSO READ: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா; விற்பனை தகவல் வெளியீடு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR