முடி கருகருன்னு வளர..காபியுடன் ‘இதை’ சேர்த்து தலையில் தடவுங்கள்!
Tips To Make Turn Whitened Hair Black : நம்மில் பலருக்கு முடி கருகருவென வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கென்றிருக்கும் சில டிப்ஸை இங்கு பார்ப்போம்.
Tips To Make Turn Whitened Hair Black : இப்போதைய தலைமுறையினர் பலருக்கு, இளம் வயதிலேயே முடி நரைக்க ஆரம்பித்து விடுகிறது. இளநரை, எப்போதும் இருக்கும் விஷயம்தான் என்றாலும், இதனால் பலர் தங்களின் நம்பிக்கையினை இழந்தது போல உணருகின்றனர். 40-50 வயதில் நரைக்க வேண்டிய முடி, இப்போது 30-35 வயதிலேயே நரைக்க ஆரம்பித்து விடுகிறது. இதனை மறைக்க பலர் டை அடிக்கின்றனர். இதில் இருக்கும் ரசாயன பொருட்கள், அப்போதைக்கு நம் முடியை வெள்ளை ஆக்கினாலும், பின்பு பல்வேறு உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
டை உபயோகிப்பதால் ஏற்படும் கேடு:
தலைக்கு டை பயன்படுத்தினால், முடி சேதமடைய வாய்ப்புள்ளது. டையை அதிகமாக பயன்படுத்தினால், முடி உதிர்வு, முடி காய்ந்து போகுதல் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படலாம். தலைமுடி நரைத்தால், இப்படி டை தடவுவதை விட்டுவிட்டு, நாம் சில வீட்டு பொருட்களை உபயோகித்தாலே போதும். இதற்கு நாம் காபியுடன் சில பொருட்களை சேர்த்துக்கொண்டாலே போதும்.
காபியுடன் தயாரிக்க வேண்டியது:
அடுப்பை ஆன் செய்து, ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, 2 டீஸ்பூன் காபி பவுடரை போட்டு கலக்க வேண்டும். அந்த தண்ணீரை சில நிமிடங்கள் கொதிக்க வைத்த பின்னர், அரை கப் மருதாணி பவுடரை கலக்க வேண்டும். அப்படி கலக்கும் போது, அந்த தண்ணீர் திக் ஆக மாறும். இதையடுத்து, அந்த தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பவுடரை சேர்த்து கலக்க வேண்டும். இவை மூன்றிற்குமே முடியை இயற்கையாக கருப்பாக்கும் சக்தி இருக்கிறதாம்.
இவை மூன்றையும் கலந்த பின்னர், இது பேஸ்ட் போன்று இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். ரொம்ப கட்டியாக அல்லது ரொம்ப தண்ணிராக இருந்துவிடக்கூடாது. பின்னர், அடுப்பை அணைத்து விட்டு, அதில் அரை அல்லது ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விடலாம்.
நல்ல ரிசல்ட் வருவதற்கு..
கைகளில் மருதாணி வைத்தால், நாம் வழக்கமாக ஒரு இரவு அல்லது 8 மணி நேரம் ஊற வைப்போம் அல்லவா? அது போலத்தான் இதுவும். ஆனால், தலையில் தேய்ப்பதற்கு முன்பு, நாம் ஒரு இரவு ஒரு கிண்ணத்தில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும். விடிந்த பின்னர், மதிய வேளையில் இதை தலைவில் தடவினால், வெள்ளை முடி இருந்த தடமே தெரியாமல் போய் விடும்.
முடிக்கு ஏற்ற உணவுகள்:
நாம் வெளியில் உபயோகிக்கும் பொருட்கள் மட்டுமல்ல, சாப்பிடும் உணவுகளும் மேஜிக் செய்யும். ஆனால் அவற்றிற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இரும்புச்சத்து உணவுகள்:
கீரை வகை, பருப்பு வகை உணவுகள் சாப்பிடுவது முடி இழப்பு அபாயத்தில் இருந்து நம்மை காப்பாற்றும்.
வைட்டமின் பி:
முட்டை, நட்ஸ் மற்றும் முழு தானிய உணவுகளை நாம் டயட்டில் சேர்த்துக்கொண்டால் கண்டிப்பாக முடிக்கு உறுதியளிக்கும்.
காப்பர் சத்து:
சூர்ய காந்தி விதைகள், டார்க் சாக்லேட், எள் விதைகள் ஆகியவை நம் முடியின் உறுதிக்கு உறுதியளிக்கின்றன.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | முடி வளர்ச்சி அதிகரிக்க... கறுவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் அதிக பலன் கிடைக்கும்
மேலும் படிக்க | 20 நாட்களில் சொட்டை தலையிலும் முடி வளரும். இந்த வீட்டு வைத்தியம் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ